பயிர் செய்கைக்கு பயன்படுத்தாத காணிகள், பசுமை வீட்டு தோட்ட வீட்டுப்பயிர்ச்செய்கைக்கு ……..

இதுவரையிலும்,  விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படாத பல காணிகள் அரச நிறுவனங்களின் கீழ் காணப்படுகின்றன.

அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் ‘பசுமை வீட்டுத் தோட்டத் திட்டம் – 2022’ என்ற திட்டத்திற்காக இந்த காணிகளை பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள்பட்டுள்ளது இது தொடர்பான அனைத்து தகவல்களும் காணி அமைச்சின் செயலாளரின் தலைமையிலான குழுவின் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ளதாக காணி அமைச்சர்; எஸ். எம் சந்திரசேன கூறினார்.

‘பசுமை வீட்டுத் தோட்டத் திட்டம்; – 2022’  தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே  அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அரச நிறுவனங்களின் கீழ் காணப்படுகின்ற இவ்வாறான காணிகளை பயன்படுத்தி பாரிய வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ள முடியும். நாம் தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ,மக்களின் உணவு தேவைக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பசுமை வீட்டுத் தோட்டத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியும் என்றும் அமைச்சர் குறிப்பட்டார்.

அத்துடன், இன்று மக்கள் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையில் இருந்து விடுபட்டு அனைவரும் மரக்கறிகளை கடைகளில்  கொள்வனவு செய்வதற்கு பழக்கப்பட்டுள்ளனர். எனவே வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கைக்கு மக்களை பழக்கப்படுத்துவதற்கு பசுமை வீட்டுத் தோட்டத் திட்டம்; – 2022′ நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவம் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.