ஐபிஎல் உள்ளிட்ட 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் அபாயகரமான பேட்ஸ்மேனாக விளங்கியவர் கிறிஸ் கெய்ல். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் லீக்குகளில் பங்கேற்கும் அவர், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட தன்னுடைய பெயரை பதிவு செய்யவல்லை. ஐபிஎல் வரலாற்றில் பல அரிய சாதனைகளுக்கு சொந்தக்காரரான கிறிஸ் கெயில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் பங்கேற்காதது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க | இந்திய அணியில் பும்ராவின் இடத்தை நிரப்பப்போகும் 150 கி.மீ வேகப்புயல்
ஐபிஎல் ரிட்டன்ஸ்
இந்நிலையில், யுனிவர்ஸ் பாஸ் ஐபிஎல் 2023-ல் மீண்டும் விளையாட இருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கான தயாரிப்புகளை இப்போது தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அவர், அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான தயாரிப்பை இப்போது தொடங்கியிருப்பதாக நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், உண்மையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் அவர் பங்கேற்க வாய்ப்புகள் மிக மிக குறைவு. இப்போதே கிறிஸ் கெயலுக்கு 42 வயதாகிறது. பிட்னஸ் மற்றும் வயது காரணமாக அவரை அணிகள் ஏலம் எடுக்காது என்பது அவருக்கு தெரியும். இருந்தபோதும், நகைச்சுவையாக இப்படியான பதிவை பகிர்ந்துள்ளார்.
கெய்லின் ஐபிஎல் ஹிஸ்டிரி
கிறிஸ் கெய்ல் 2009 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடினார். இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய மூன்று அணிகளுக்காக விளையாடியுள்ளார். மொத்தம் 142 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4965 ரன்கள் குவித்துள்ளார். அவரின் ஸ்டிரைக் ரேட் 148.96. ஐபிஎல் வரலாற்றில் 6 சதங்களை அடித்து அதிக சதம் அடித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான கெய்ல், 357 சிக்சர்களை பறக்கவிட்டுள்ளார்.
ஐபிஎல்லில் அதிவேக சதம்
ஐபிஎல் தொடரில் அதிவேக சதம் அடித்த சாதனையும் கிறிஸ் கெயில் வசம் உள்ளது. 2013-ம் ஆண்டு ஆர்சிபி அணிக்காக விளையாடிய கிறிஸ் கெய்ல், புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக இந்த சாதனையை நிகழ்த்தினார். இந்தப் போட்டியில் கெய்ல் 30 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார். கெய்ல் 66 பந்துகளில் 17 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 175 ரன்களை குவித்தார்.
தனிநபர் அதிகபட்சம்
உலகளவில் 20 ஓவர் கிரிக்கெட் தனிநபர் ஒருவர் எடுத்துள்ள அதிகபட்ச ரன்னாக உள்ளது. இந்த மிகப்பெரும் சாதனைக்கு சொந்தக்காரரான கெயில், ஐபிஎல் போட்டியில் மட்டுமல்லாது பல நாடுகளில் நடைபெற்று வரும் 20 ஓவர் தொடர்களிலும் பங்கேற்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். வர்ணனையாளர் உள்ளிட்ட வேறொரு அவதாரத்தில் வேண்டுமானால் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு அவர் திரும்பலாம்.
மேலும் படிக்க | RCBvsKKR:கோலியின் கோப்பை கனவை தகர்த்த கொல்கத்தா – பழிவாங்க காத்திருக்கும் ஆர்சிபி