இந்த போன்களில் இனி WhatsApp இயங்காது!

உலகளவில் அதிக பயனர்களைக் கொண்ட செயலியாக
WhatsApp
வலம் வருகிறது. இதை பயனர்கள் சொந்த தேவைக்காகவும், வேலை நிமித்தமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இன்றைய சூழலில், பல முக்கிய தகவல்கள் வாட்ஸ்அப் தளம் வழி பகிரப்படுகிறது.

பயனர்களின் தேவைக்கேற்ப பல மாற்றங்களையும் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. பாதுகாப்பு, அம்சங்கள் என Meta வாட்ஸ்அப் செயலியை பல கட்டங்களாக மேம்படுத்தி வருகிறது. இந்த சூழலில், சில ஸ்மார்ட்போன்களுக்கு சேவையை நிறுத்த உள்ளதாக நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, மார்ச் 31 ஆம் தேதி முதல் குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு சேவை நிறுத்தப்படுகிறது. குறிப்பிட்ட இயங்குதள பதிப்புகள் நிறுவப்பட்டிருக்கும் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத மட்டும் செய்யாதீங்க – முடக்கப்படும் Whatsapp கணக்குகள்!

இதில்
KaiOS
,
iOS
,
Android
ஆகிய இயங்குதளங்கள் நிறுவப்பட்டிருக்கும் ஸ்மார்ட்போன்கள் அடங்கும். பழைய இயங்குதள பதிப்புகளுக்கு புதிய அப்டேட் கொடுக்க முடியாத காரணத்தால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Android போன்கள்:
உங்கள் மொபைலில் ஆண்ட்ராய்டு 4.1 அல்லது அதற்கு முந்தைய பதிப்பு இருந்தால், வாட்ஸ்அப் வேலை செய்வதை நிறுத்திவிடும்.

iOS போன்கள்:
iOS 10 பதிப்பு அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பில் உள்ள iPhone பயனர்கள் தங்கள் சாதனத்தில் WhatsApp-ஐ பயன்படுத்த முடியும். ஆப்பிள் தற்போது iOS 15 பதிப்பை வழங்குகிறது. இந்த பதிப்பு 3 முதல் 4 ஆண்டுகள் பழைய ஐபோன் மாடல்களுக்கு அப்டேட்டாக வழங்கப்பட்டுள்ளது.

KaiOS:
உங்கள் சாதனம் KaiOS இயங்குதளத்தால் இயக்கப்பட்டிருந்தால், WhatsAppஐ இயக்க, KaiOS பதிப்பு 2.5 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு தேவை. இதில் JioPhone,
JioPhone
2 ஆகியவையும் அடங்கும்.

எந்தெந்த ஸ்மார்ட்போன்களில் மார்ச் 31 முதல் வாட்ஸ்அப் வேலை செய்யாது என்பதை பார்க்கலாம்.

மேலதிக செய்திகள்:
தயாராகும் Xiaomi Pad 5 – குறைந்த விலையில் விற்பனைக்குக் கொண்டு வர திட்டம்!
Smart Watch-ஆல வந்த வினை – நபரை தூக்கிய இண்டர்நேஷனல் போலீஸ்!
விஐபி மொபைல் நம்பர் வேண்டுமா – அப்ப இத படிங்க முதல்ல!

அடுத்த செய்திதயாராகும் Xiaomi Pad 5 – குறைந்த விலையில் விற்பனைக்குக் கொண்டு வர திட்டம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.