’கடவுளின் தூதர் கனவில் வந்து கொலை செய்ய உத்தரவிட்டார்’ – ஆசிரியை-ஐ கழுத்தறுத்து கொன்ற சக ஆசிரியை,மாணவிகள்

லாகூர்,
இஸ்லாமிய மதத்தினரை பெரும்பான்மையாக கொண்ட நாடு பாகிஸ்தான். இந்நாட்டில் இஸ்லாமிய மத கடவுளை அவமதிக்கும் வகையில் செயல்பட்டதாக பலர் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் இஸ்லாமிய மதத்தை அவமதித்ததாக இலங்கையை சேர்ந்த நபர் பாகிஸ்தானில் நடு சாலையில் தான் வேலை செய்து வந்த தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களால் அடித்து நடு சாலையில் எரித்து கொல்லப்பட்டார்.

இந்நிலையில், இஸ்லாமிய மத கடவுளின் தூதர் நபிகள் நாயகம் கனவில் வந்து உத்தரவிட்டதாக கூறி மதபள்ளியில் பணியாற்றிவந்த ஆசிரியையை சக ஆசிரியை மற்றும் மாணவிகள் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் கைபர் – பக்துவா  மாகாணன் டீரா இஸ்மாயில் கான் பகுதியில் ஜாமியா இஸ்லாமியா ஃபலஹுல் பினெட் என்ற இஸ்லாமிய மதப் பெண்கள் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் சொஃபரா பிபி.
அவர் நேற்று பள்ளியில் பணியை முடித்துவிட்டு மாலை வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். பள்ளிக்கூட வாசல் அருகே நடந்து சென்ற சொஃபரா பிபியை அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிவந்த பெண்ணும், இரு மாணவிகளும் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அந்த 3 பேரும் பிபியை தரையில் தள்ளி தாங்கள் வைத்திருந்த உருட்டு கட்டையால் தாக்கினர். பின்னர், 3 பேரும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு பிபியை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்தனர். பிபி மதப்பள்ளிக்கூட வாசலிலேயே ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார்.
இதனையடுத்து, பிபியை கழுத்தறுத்து கொலை செய்த சக ஆசிரியை, 2 மாணவிகள் என 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கொலைக்கான காரணம் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிபியை கொலை செய்த சக ஆசிரியையும் அந்த 2 மாணவிகளும் உறவினர்கள் என்பது தெரியவந்தது. அந்த மாணவிகளிடம் நடத்திய விசாரணையில், அந்த மாணவிகளின் உறவினரான 13 வயது சிறுமியின், தனது கனவில் இஸ்லாமிய மத கடவுளின் தூதர் நபிகள் நாயகம் தோன்றியதாகவும், அவர் ஆசிரியை பிபி (கொல்லப்பட்ட ஆசிரியை) தனக்கு எதிராகவும் (நபிகள் நாயகம்) , இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையில் செயல்படுவதாகவும், இதனால் அவரை கொலை செய்யும்படியும் நபிகள் நாயகம் உத்தரவிட்டதாக அந்த சிறுமி தனது உறவினர்களான மாணவிகள், ஆசிரியையிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து, அந்த சிறுமியின் பேச்சை கேட்ட சிறுமியின் உறவினர்களாக இரு மாணவிகளும், மதப்பள்ளியில் ஆசிரியையும் சக ஆசிரியையான பிபியை கழுத்தறுத்து கொன்றுள்ளனர்’ என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.   
மதப்பள்ளி ஆசிரியை சக ஆசிரியை மற்றும் மாணவிகளால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.