சிஆர்பிஎஃப் முகாம் மீது குண்டுவீசிய புர்கா அணிந்த பெண்

ஜம்மு காஷ்மீரில் சி.ஆர்.பி.எஃப். பதுங்கு குழி மீது பெட்ரோல் குண்டு வீசிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீரின் சோபூரில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை பதுங்கு குழி மீது புர்கா அணிந்த பெண் ஒருவர் நேற்று  இரவு பெட்ரோல் குண்டு வீசினார். இது குறித்த சிசிடிவி காட்சியும் வெளியாகி உள்ளது.

வீடியோவில்  மக்கள் சாலையில் நடந்து சென்று கொண்டு இருக்கிறார்கள் . புர்கா அணிந்த பெண் ஒருவர் அந்த வழியாக செல்கிறார். அந்தப் பெண் கையில் ஒரு பையை வைத்து  இருக்கிறார்.  அதை அவர் பதுங்கு குழிக்குள் வீசிவிட்டு அங்கிருந்து ஓடுகிறார். பதுங்குக் குழி தாக்கப்பட்டதை அடுத்து, அங்கு தீ விபத்து ஏற்பட்டதையும், பணியாளர்கள் தண்ணீரை ஊற்றி அணைக்க முயற்சிப்பதையும் காணமுடிகிறது. இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#WATCH Bomb hurled at CRPF bunker by a burqa-clad woman in Sopore yesterday#Jammu&Kashmir

(Video source: CRPF) pic.twitter.com/Pbqtpcu2HY
— ANI (@ANI) March 30, 2022

இதுகுறித்து காஷ்மீர் ஐஜிபி விஜய் குமார் கூறுகையில், ”சோபூரில் உள்ள சிஆர்பிஎப் பதுங்கு குழி மீது நேற்று வெடிகுண்டு வீசிய பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் விரைவில் கைது செய்யப்படுவார்” என்று  கூறினார்.

இதையும் படிக்க: வங்கி லாக்கர் அறையில் சிக்கித் தவித்த 89 வயது முதியவர் – போராடி மீட்ட போலீஸ்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.