நெருங்க முடியாத சாதனை படைத்த 'கே.ஜி.எஃப் 2': ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

இந்திய அளவில் மிகப்பெரிய ஹிட்டித்த கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வெளியீட்டிற்கு காத்து கொண்டிருக்கிறது. ஜூலை 16-ம் தேதி வெளியாக இருந்த ‘
கே.ஜி.எஃப் 2
‘ படம் கொரோனா இரண்டாம் அலையால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் இந்தப்படம் வெளியாகவுள்ளது.

பிரஷாந்த் நீல்
இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான படம் ’கேஜிஎஃப்’. இந்திய அளவில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வெளியீட்டிற்கு காத்து கொண்டிருக்கிறது. நடிகர்
யாஷ்
உடன் ஸ்ரீநிதி ஷெட்டி,
சஞ்சய் தத்
, பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்ட நடசத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

அண்மையில் ‘கேஜிஎஃப் 2’ படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அப்போது கடந்த ஜூலை மாதம் 16-ஆம் தேதி ‘கேஜிஎஃப் 2’ படம் உலகம் முழுக்க வெளியாகும் அறிவித்திருந்தனர் படக்குழு. ஆனால், கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தால் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட பல மாநிலங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால்,‘கேஜிஎஃப் 2’ படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்தனர் படக்குழுவினர்.

இவருக்கு அவரே பரவாயில்லை: ‘தளபதி 66’ அப்டேட்டால் கடுப்பான ரசிகர்கள்..!

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் வெளியானது. படத்தின் டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த டிரைலர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது டிரைலர் வெளியான 24 மணி நேரத்திற்குள் நாட்டின் அனைத்து மொழிகளையும் சேர்த்து 109 மில்லியனை கடந்து சாதனை படைத்துள்ளது.

மேலும் இந்தப்படத்தின் டிரைலர், வெளியான 24 மணி நேரத்தில் இதுவரை வெளியான இந்திய படங்களிலேயே அதிக பார்வைகளை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது. ‘கே.ஜி.எஃப் 2’ படம் ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் விஜய்யின் ‘
பீஸ்ட்
‘ படம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

நெல்சனை விளாசும் விஜய் ரசிகர்கள் – என்ன காரணம் தெரியுமா?

அடுத்த செய்திரஜினியை பற்றி கிசுகிசு சொன்ன அவர்..! இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா ?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.