பட்ஜெட் புத்தகத்தில் செந்தில் பாலாஜி படம்… கோவை மாநகராட்சி முதல் பட்ஜெட்டில் குளறுபடி!

கோவை நகர் வீதியில் அமைந்திருக்கும் மாநகராட்சி மாமன்றத்தில் இன்று மண்டல தலைவர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. வடக்கு மண்டல தலைவர் பதவிக்கு கதிர்வேலும், தெற்கு மண்டலத்துக்கு தனலட்சுமியும், கிழக்கு மண்டலத்துக்கு லக்குமி இளஞ்செல்வியும், மேற்கு மண்டலத்துக்கு தெய்வானை தமிழ்மறையும், மத்திய மண்டலத்துக்கு மீனா லோகுவும் போட்டியிட்டனர். கூட்டணி கட்சிகளுக்கு மண்டலத் தலைவர் பதவிகளை ஒதுக்கீடு செய்யாமல் திமுக மட்டுமே இதில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் அவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாத காரணத்தால் அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

சாதிப் பெயரை கூறி மிரட்டல்: அமைச்சர் ராஜகண்ணப்பனை ஏன் டிஸ்மிஸ் செய்யவில்லை?

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா சான்றிதழ்களை வழங்கினார். கோவை மாநகராட்சி மண்டல தலைவர்களுக்கான தேர்தலில் 3 அதிமுக கவுன்சிலர்களும் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார்.

கோவை மாநகராட்சியில் மொத்த வருவாய் 2317.97 கோடி உள்ள நிலையில், மொத்த செலவீனம் 2337.28 கோடி ரூபாயாக உள்ளது. 19.31 கோடி ரூபாய் பற்றாக்குறை உள்ளது. இந்த பட்ஜெட்டில் அடிப்படை வசதிகள் மேம்பாட்டிற்காக ஒரு மண்டலத்திற்கு ரூ. 10 கோடி வீதம் மொத்தம் ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. என்று அதில் அறிவித்தார். மேலும் பட்ஜெட் மீதான விவாதம் இன்று மாலை 04.30 மணிக்கு நடைபெறும் என்றும் குறிப்பிட்டிருந்தார் மேயர் கல்பனா.

மாநகராட்சி பட்ஜெட் புத்தகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படம், முதல்வர் முக ஸ்டாலினின் புகைப்படம், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மின்சாராத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன. துறைக்கு சற்றும் தொடர்பு இல்லாத அமைச்சரின் புகைப்படம் இடம் பெற்றிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதே போன்று தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியின் போது மேயர் கல்பனா தீண்டாமையை கடைபிடிக்கமாட்டோம் என்பதற்கு பதிலாக தீண்டாமையை கடைபிடிப்போம் என்றும் என்று வாசித்துள்ளார். இதற்கும் அதிமுகவில் இருந்து கடுமையான கண்டனம் எழுந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.