பலத்த சரிவுக்கு பிறகு ஏன் இந்த தடுமாற்றம்.. இனி என்னவாகும்.. நிபுணர்களின் கணிப்பு?

தங்கம்(gold) விலையானது இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்றும் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது எனலாம்.

ஏனெனில் ரஷ்யா – உக்ரைன் இடையேயான பேச்சு வார்த்தையில் சில உடன்பாடு எட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனடிப்படையில் உக்ரைன் தலை நகர் கீவில் இருந்து, செர்னிஹிவ் நகரில் இருந்து ரஷ்ய படைகளை குறைக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

விரைவில் உக்ரைன் போர் முடிவுக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவே முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் ஆறுதல் தரும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்திய பார்மா துறையை புரட்டிப்போடக் காத்திருக்கும் ஷாங்காய் லாக்டவுன்..!

பலத்த சரிவுக்கு பிறகு ஏற்றம்

பலத்த சரிவுக்கு பிறகு ஏற்றம்

இதற்கிடையில் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையில் கடந்த அமர்வில் பலத்த சரிவினைக் கண்ட நிலையில், இன்று மீண்டும் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தினை கொடுத்துள்ளது எனலாம். அதெல்லாம் சரி இன்று மீண்டும் ஏன் தங்கம் விலை ஏற்றத்தில் காணப்படுகின்றது. இந்த ஏற்றமானது இப்படியே தொடருமா? அடுத்து என்ன செய்யலாம்? கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

ஓரு மாத சரிவில் தங்கம்

ஓரு மாத சரிவில் தங்கம்

கடந்த அமர்வில் உக்ரைன் -ரஷ்யா குறித்தான சுமூக தீர்வு வெளியான நிலையில், தங்கம் விலையானது ஒரு மாத சரிவினைக் தொட்டது. இது பாதுகாப்பு புகடலிமான தங்கத்தின் தேவையினை குறைத்தது.இதன் காரணமாக தங்கம் விலையானது கடந்த அமர்வில் சரிவினைக் கண்டது. எனினும் டாலர் மதிப்பு சரிவும் மற்றும் பத்திர சந்தை வீழ்ச்சியானது அதிக விலையிறக்கத்தினை தடுத்துள்ளது எனலாம்.

சந்தேகத்தை கிளப்பும் அமெரிக்கா
 

சந்தேகத்தை கிளப்பும் அமெரிக்கா

எனினும் அமெரிக்கா படைகள் குறைக்கப்படுவதாக ரஷ்யா கூறியிருந்தாலும், இது குறித்தான முக்கிய ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்தாகவில்லை என்ற சந்தேகத்தினை எழுப்பியுள்ளது. இதற்கிடையில் தங்கத்தின் முக்கிய சப்போர்ட் லெவல் 50,400 ரூபாய் என்ற லெவலில் உள்ளது. இதனை உடைக்காவிட்டால் மீண்டும் இன்று 51,500 ரூபாய் என்ற லெவலை தொடலாம். ஆனால் நிபுணர்களின் இத்தகைய கணிப்புகளுக்கு மத்தியில், இன்று தங்கம் விலையானது 51000 ரூபாய் என்ற லெவவில் வர்த்தகமாகி வருகின்றது..

ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கலாம்

ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கலாம்

பல்வேறு காரணிகள் தங்கத்திற்கு எதிராக இருந்தாலும், இன்று வெளியாகவிருக்கும் அமெரிக்காவின ஜிடிபி விகிதம் மற்றும் ADP-யின் பண்னை அல்லாத வேலை குறித்தான தரவும் வெளியாகவுள்ளது. ஆக இந்த தரவினை பொறுத்தே இன்று பெரியளவில் வர்த்தகம் இருக்கலாம். எனினும் அதுவரையில் சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ரூ.4500-க்கு மேல் சரிவு

ரூ.4500-க்கு மேல் சரிவு

தங்கம் விலையானது சமீபத்தில் 10 கிராமுக்கு 55558 ரூபாய் என்ற உச்சத்தினை எட்டியது. ஆக அந்த விலையில் இருந்து பார்க்கும்போது தற்போது 4500 ரூபாய்க்கு மேலாக சரிவில் தான் காணப்படுகின்றது. ஆக இது குறைந்த விலையில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.இந்த இடத்தில் ஷார்ட் கவரிங்கும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தற்போதைக்கு தங்கம் விலைக்கு சாதகமாக அமையலாம்.

டெக்னிக்கல் பேட்டர்ன் என்ன சொல்கிறது?

டெக்னிக்கல் பேட்டர்ன் என்ன சொல்கிறது?

ஃபண்டமெண்டல் காரணிகள் சில தங்கத்திற்கு சாதகமாகவே உள்ளன. இதற்கிடையில் டெக்னிக்கலாகவும் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று ஏற்றத்தினை காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.எனினும் கட்டாயம் ஸ்டாப் லாஸ் வைத்து வாங்குவது நல்லது. இதுவே நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் இன்று மாலை வெளியாகவிருக்கும் டேட்டாவினை பொறுத்து தீர்மானிக்கலாம். மேலும் தங்கத்தின் கடந்த வார உச்சமான 1967.20 டாலர்களை உடைத்தால் மீண்டும் நல்ல ஏற்றம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம்

காமெக்ஸ் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று, இரண்டு நாள் சரிவுக்கு பிறகு, இன்று மீண்டும் ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸுக்கு 10.85 டாலர்கள் அதிகரித்து, 1923.10 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும் இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, உச்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றம் காணும் விதமாகவே காணப்படுகின்றது.

காமெக்ஸ் வெள்ளி

காமெக்ஸ் வெள்ளி

தங்கம் விலையினை போலவே வெள்ளியின் விலையும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 1.03% அதிகரித்து, 24.992 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. எனினும் வெள்ளி விலையும் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம்

எம்சிஎக்ஸ் தங்கம்

இந்திய சந்தையினை பொறுத்தவரையில், தங்கம் விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக ஏற்றத்திலேயே காணப்படுகின்றது.தற்போது 10 கிராமுக்கு 232 ரூபாய் அதிகரித்து, 51,045 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. இதன் காரணமாக மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி

எம்சிஎக்ஸ் வெள்ளி

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளி விலையானது சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 310 ரூபாய் அதிகரித்து, 67,257 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. எப்படியிருப்பினும் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரண தங்கம்

ஆபரண தங்கம்

சர்வதேச சந்தையி தங்கம் விலையானது சற்று அதிகரித்துள்ள நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை இதுவரையில் பெரியளவில் மாற்றம் காணவில்லை. தற்போது சென்னையில் கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 4792 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 8 ரூபாய் குறைந்து, 38,336 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம்

தூய தங்கம்

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 5228 ரூபாயாகவும், இதுவே 8 கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து, 41,824 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 52,280 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை

வெள்ளி விலை

சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது மாற்றமின்றி காணப்படுகின்றது. இன்றும் கிராமுக்கு 72.10 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 721 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 72,100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதுவே நீண்டகால நோக்கில் இன்று வெளியாகவிருக்கும் ஜிடிபி, வேலை வாய்ப்பு குறித்தான தரவு, டாலர் மதிப்பு, பத்திர சந்தை, தேவை உள்ளிட்ட பல காரணிகளும் தீர்மானிக்கலாம். ஆக சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.ஆபரணத் தங்கத்தினை பொறுத்தவரையில் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on march 30th, 2022: gold price to remain volatile ahead of US GDP data

gold price on march 30th, 2022: gold price to remain volatile ahead of US GDP data/பலத்த சரிவுக்கு பிறகு ஏன் இந்த தடுமாற்றம்.. இனி என்னவாகும்.. நிபுணர்களின் கணிப்பு?

Story first published: Wednesday, March 30, 2022, 11:22 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.