IPL live score: வெற்றிக்கணக்கை தொடங்குமா பெங்களூரு? கொல்கத்தாவுடன் இன்று மோதல்!

IPL 2022, RCB vs KKR Live score updates in tamil: 15-வது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் தொடரில் மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் 6வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான பெங்களூரு அணி பஞ்சாப்புக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 205 ரன்கள் குவித்தும் தோல்வியை தழுவியது.

இந்த ஆட்டத்தில் கேப்டன் டு பிளெசிஸ் (88), விராட் கோலி (41) அணிக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர். ஆனால், பந்துவீச்சில் சொதப்பியதால் அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டது. இம்முறை அதில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி தொடக்க ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது. அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் மற்றும் சுழல் சூறாவளிகள் வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன் பந்துவீச்சில் மிரட்டினர். பேட்டிங்கில் அஜிங்க்யா ரஹானே (44) நல்ல ஃபார்மில் இருந்தார். இது அணிக்கு கூடுதல் பலம் கொடுத்துள்ளது.

தொடரில் இதுவரை நடந்த 4 ஆட்டங்களில் டாஸ் வென்ற அணியே வெற்றியை ருசித்துள்ளது. எனினும், இவ்விரு அணிகளும் ஏறக்குறைய சம பலத்துடன் காணப்படுவதால் எந்த வெற்றி பெறும் என்பதை கணிப்பது கடினம். ஆகையால், தோல்வி – வெற்றியுடன் களமிறங்கும் பெங்களூரு – கொல்கத்தா அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

Indian Premier League, 2022Dr. DY Patil Sports Academy, Navi Mumbai   30 March 2022

Royal Challengers Bangalore 

vs

Kolkata Knight Riders  

Match Yet To Begin ( Day – Match 6 ) Match begins at 19:30 IST (14:00 GMT)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.