'ஆர் ஆர் ஆர்' இயக்குனருடன் என்னதான் பிரச்சனை: உண்மையை போட்டுடைத்த ஆலியா..!

ராஜமெளலி
இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘
ஆர் ஆர் ஆர்
‘. இதில்
ராம்சரண்
,
ஜூனியர் என்.டி.ஆர்
,
ஆலியா பட்
, அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக இந்த படத்தைத் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் இந்தப் படம் கடந்த 25ஆம் தேதி வெளியாகியது.

‘ஆர் ஆர் ஆர்’ படத்தில் நடித்துள்ள ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரின் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். ஆனாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆலியா பட், ‘ஆர் ஆர் ஆர்’ படத்தில் வெறும் சில நிமிட காட்சிகளில் மட்டுமே வந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ஆலியா பட்டும் ராஜ மெளலி மீது கடும் கோபத்தில் இருந்ததாக கூறப்பட்டது.

அதனை வலுப்படுத்தும் விதமாக அண்மையில் ஆலியா பட்டின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ஆர் ஆர் ஆர்’ படம் தொடர்பான பதிவுகள் நீக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தற்போது விளக்கமளித்துள்ளார் ஆலியா பட். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “படக்குழு மீது உள்ள அதிருப்தியால், ‘ஆர்.ஆர்.ஆர்.’ படம் தொடர்பான பதிவுகளை, எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நான் நீக்கிவிட்டதாக தகவல்கள் பரவியதை அறிந்தேன்.

Dhanush: ஐஸ்வர்யாவுடன் பிரிவு… அம்மா, அப்பாவிடம் தஞ்சமடைந்த தனுஷ்..!

இன்ஸ்டாகிராமில் தற்செயலாக நடக்கும் விஷயங்களை வைத்து, அனுமானத்தின் பேரில் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று அனைவரையும் நான் மனதார கேட்டுக்கொள்கிறேன். சீரற்ற முறையில் இருக்கும் எனது இன்ஸ்டாகிராம் பதிவுகளை, நான் எப்போதும் அடிக்கடி சீரமைத்துக்கொண்டே இருப்பேன். ‘ஆர்.ஆர்.ஆர்.’ போன்ற பிரம்மாண்டப் படங்களில், நானும் நடித்துள்ளேன் என்பதை நினைத்து, எப்போதும் பெருமைப்படுகிறேன்.

சீதா கதாபாத்திரத்தில் நடிப்பதை நான் மிகவும் விரும்பினேன். ராஜமௌலி சார் இயக்கிய முறை எனக்குப் பிடித்திருந்தது. தாரக் மற்றும் சரண் ஆகியோருடன் பணிபுரிந்தது எனக்குப் பிடித்திருந்தது. இந்தப் படத்தில் நடந்த சின்ன சின்ன விஷயங்கள்கூட, எனக்கு சிறப்பான அனுபவத்தை கொடுத்தது. நான் கவலைப்படுவதற்கும், இந்த விஷயங்களை தெளிவுப்படுத்துவதற்கும் ஒரே காரணம் என்னவெனில், ராஜமௌலி மற்றும் படக்குழுவினர், இந்த அழகான படத்தை உயிர்ப்பிக்க பல ஆண்டுகளாக, தங்களது ஆற்றலையும், முயற்சியையும் கொடுத்து உழைத்துள்ளனர்.

Alia Bhatt Instagram

அதனால் இந்தப் படத்தைப் பற்றியும், இந்தப் படத்தில் எனது அனுபவத்தை பற்றி வரும் தவறான தகவல்கள் அனைத்தையும் மறுக்கிறேன்” என பதிவிட்டுள்ளார். இதனால் ராஜ மௌலி மீது ஆலியா பட் கோபத்தில் இருப்பதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

3 நாட்களில் படம் செய்த வசூலும், ரசிகர்களின் செயலும் – RRR படத்தின் சாதனை!

அடுத்த செய்திஅடையாளம் தெரியாமல் மாறிப்போன நயன்தாரா..கவலையில் ரசிகர்கள்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.