தவறியும் இப்போதைக்கு இந்த பங்கினை வாங்கிடாதீங்க..ஏன் தெரியுமா?

பங்கு சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும்போது முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம். அந்த சமயத்தில் இண்டிரா டே வணிகர்கள் தொடர்ந்து நல்ல லாபம் பார்க்கலாம்.

ஆர்டர்கள் அதிகளவில் எடுத்து விற்பனை செய்வார்கள். இதனால் குறிப்பிட்ட சில நல்ல பங்குகளில் ஆர்டர்கள் அதிகளவில் எடுக்கபப்டும்.

இந்த சமயத்தில் என். எஸ்.இ-யால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 95% லிமிட்டினை தாண்டினால் அந்த பங்குகள் எஃப் & ஓவில் தடை செய்யடும்.

ஒபன் இன்ட்ரஸ்ட் விகிதமானது 95% வரம்பினை தாண்டிய பங்குகள், மீண்டும் 80% கீழாக ஓபன் இன்ட்ரஸ்ட் குறையும் போது வர்த்தகத்திற்கு திரும்பும். இன்று எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி என்ற நிலையில், தற்போது என்.எஸ்.இ-யில் வோடபோன் ஐடியா நிறுவனம் தடை செய்யப்பட்டுள்ளது.

30,500% லாபம்.. அள்ளிக் கொடுத்த ஐடி பங்கு.. இன்னும் அதிகரிக்கலாம்.. நிபுணர்கள் செம கணிப்பு!

வோடபோன் ஐடியா தடை

வோடபோன் ஐடியா தடை

ஒபன் இன்ட்ரஸ்ட் விகிதமானது 95% வரம்பினை தாண்டிய பங்குகள், மீண்டும் 80% கீழாக ஓபன் இன்ட்ரஸ்ட் குறையும் போது வர்த்தகத்திற்கு திரும்பும். இன்று எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி என்ற நிலையில், தற்போது என்.எஸ்.இ-யில் வோடபோன் ஐடியா நிறுவனம் தடை செய்யப்பட்டுள்ளது.

அபராதம் விதிக்கலாம்

அபராதம் விதிக்கலாம்

கடந்த அமர்வில் பி.வி.ஆர், சன் டிவி உள்ளிட்ட பங்குகளும் எஃப்.& ஓவில் தடை செய்யப்பட்டன. இவ்வாறு எஃப் & ஒவில் தடை செய்யப்பட்ட பங்குகளை வாங்கினால் உங்களுக்கு ஆயிரக் கணக்கில் அபராதம் விதிக்கப்படலாம் என்பதால் இதனை கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது.

எப்படி தெரிந்து கொள்ளலாம்?
 

எப்படி தெரிந்து கொள்ளலாம்?

அதெல்லாம் சரி தினசரி இதனை எப்படி தெரிந்து கொள்வது? எப்படி அபராதத்தில் இருந்து தப்பிப்பது வாருங்கள் பார்க்கலாம். இதனை https://www.niftytrader.in/ban-list என்ற என்.எஸ்.இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.

தடை செய்யப்படலாம்?

தடை செய்யப்படலாம்?

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஓபன் இன்ட்ரஸ்ட் விகிதமானது 85% தாண்டியுள்ளது. ஆக இதுவும் விரைவில் தடை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது மட்டும் அல்ல BHEL, டெல்டா கார்ப், ஜிண்டால் ஸ்டீல், நேஷனல் அலுமினியம், செயில் உள்ளிட்ட பங்குகளின் ஓபன்
இன்ட்ரஸ்ட்விகிதமானது 80% மேலாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Vodafone idea stock under F&O ban on NSE today : do you have this stock?

Vodafone idea stock under F&O ban on NSE today : do you have this stock?/தவறியும் இப்போதைக்கு இருந்த பங்கினை வாங்கிடாதீங்க..ஏன் தெரியுமா?

Story first published: Thursday, March 31, 2022, 12:47 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.