வன்னியர்களுக்கு 10.5% சிறப்பு இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் ரத்து சரியே! உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% சிறப்பு இடஒதுக்கீடு வழங்கும் தமிழகஅரசின் சட்டத்தை, உயர்நீதிமன்றம் ரத்து செய்தது சரியே என உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என உச்சநீதி மன்றம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகமான வன்னியர்களுக்கு 10.5% சிறப்பு இடஒதுக்கீடு வழங்கும் மாநில இடஒதுக்கீடு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் விசாரண முடிவடைந்து இன்று தீர்ப்பு கூறப்பட்டது.

தீர்ப்பில், வன்னியர்களுக்கு 10.5% சிறப்பு இடஒதுக்கீடு வழங்கும் தமிழகஅரசின் சட்டத்தை, உயர்நீதிமன்றம் ரத்து செய்தது சரியே என உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஓபிசி ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான  தகுதி மாநில அரசுக்கு உள்ளது என்று கூறிய உச்சநீதிமன்றம்,  2021ம் ஆண்டு இந்த  சட்டம் நடைமுறைக்கு வந்தபோது 102 வது அரசியலமைப்பு திருத்தம், பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளம் காண மாநிலத்தின் அதிகாரங்களைத் தடுக்கிறது என்று நீதிமன்றம் கூறியது. ஆனால், வகுப்புகள் ஆனால் துணை வகுப்புகளை அடையாளம் காணும் மாநிலத்தின் அதிகாரத்தை பாதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

நீதிபதி எல் நாகேஸ்வர ராவ் மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, வன்னியர்களை எம்பிசிக்களுக்குள் தனிக் குழுவாகக் கருத வேண்டும் என்ற தரவை மாநில அரசு வழங்கத் தவறிவிட்டதாகக் கூறியது.

“மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருடன் ஒப்பிடும்போது வன்னியர்களை தனி பிரிவாகக் கருதுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்று நாங்கள் கருதுகிறோம். எனவே, 2021 ஆம் ஆண்டு சட்டம் விதிகள் 14 மற்றும் 16க்கு எதிரானது” என்று நீதிபதி எல் நாகேஸ்வர ராவ் தீர்ப்பின் செயல்பாட்டு பகுதியை வாசித்தார். .

வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து மேல்முறையீட்டு வழக்கில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.