Tamil News Today Live: சுங்கச் சாவடி கட்டணங்கள் அதிகரிப்பு: இன்று இரவு முதல் அமல்

Petrol and Diesel Price: பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ₨107.45க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ₨97.52க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களில் பெட்ரோல் விலை ₨6.05, டீசல் விலை ₨6.09 உயர்ந்துள்ளது.

Tamilnadu News Update: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் முதல் மே 7-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

டெல்லியில் முதல்வர் ஸ்டாலின்

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவுள்ளார்.

India News Update:
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவலைப்படி உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

விரைவில் உள்நாட்டு 4 ஜி

விரைவில் உள்நாட்டு 4 ஜி மொபைல் சேவை வந்துவிடும் என்று மக்களவையில் மத்திய அமைச்சர் வைஷ்ணவ் தெரிவித்தார்.

Ukraine War Updates

உக்ரைன் உடன் நடத்திய சமரச பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று ரஷ்ய அதிபர் மாளிகை அறிவித்துள்ளது.

IPL Update

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 6ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

Live Updates
09:15 (IST) 31 Mar 2022
சுங்கச் சாவடி கட்டணங்கள் அதிகரிப்பு

நாடு முழுவதும் இன்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டணங்கள் உயருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள 24 சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.240 வரை கட்டணம் அதிகரிக்கிறது.

09:02 (IST) 31 Mar 2022
லூலூ நிறுவனம் தமிழ்நாடு வருவது மகிழ்ச்சி-முன்னாள் அதிமுக அமைச்சர்

லூலூ நிறுவனம் தற்போது தமிழ்நாட்டுக்கு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

08:53 (IST) 31 Mar 2022
நல்லூர் சுங்கச்சாவடியில் 40% கட்டண உயர்வு

சென்னை அருகே நல்லூர் சுங்கச்சாவடியில் 40% கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. ஒரு முறை கார் செல்ல கட்டணம் ரூ.50 என இருந்த நிலையில் நள்ளிரவு முதல் ரூ.70 ஆக உயர்த்தப்பட உள்ளது.

08:42 (IST) 31 Mar 2022
30ஆயிரம் நியாய விலை கடைகளுக்கு மானியம்

30 ஆயிரம் நியாயவிலை கடைகளுக்கு மானியம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது .

08:31 (IST) 31 Mar 2022
மதுரையில் மீன்பிடி திருவிழா

மதுரை கேசம்பட்டியில் நடந்த பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில் சாதி, மத பேதமின்றி பொதுமக்கள் பங்கேற்றனர். கட்லா, ரோகு, கெண்டை, குரவை உள்ளிட்ட மீன்கள் சிக்கின.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.