'ஷாட் பூட் த்ரீ' படத்தில் கணவன் மனைவியாக நடிக்கும் வெங்கட் பிரபு – சினேகா

அச்சமுண்டு அச்சமுண்டு, கல்யாண சமையல் சாதம், நிபுணன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அருண் வைத்யநாதன் தற்போது 'ஷாட் பூட் த்ரீ' எனும் புதிய படத்தை இயக்கி வருகிறார். ராஜேஷ் வைத்யா இப்படத்திற்கு இசையமைக்கிறார். வெங்கட் பிரபு மற்றும் சினேகா இருவரும் கணவன் மனைவியாக இப்படத்தில் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் பூவையார், ப்ரணிதி, கைலாஷ், வேதாந்த் மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திலிருந்து புதிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அமலாக்கப் பிரிவு வழக்கில் செந்தில் பாலாஜிக்கு பின்னடைவு: சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

High Court dismisses special court order on Senthil Balaji case: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பான குறியீடு செய்யப்படாத ஆவணங்களை அமலாக்கத் துறைக்கு வழங்க மறுத்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2011 -15-ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில் பாலாஜி. அப்போது போக்குவரத்துறையில், ஓட்டுநர் … Read more

தேனி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்த பாஜக விவசாய அணியினர்.!

தேனி மாவட்ட ஆட்சியருடன் பாஜக விவசாய அணி நிர்வாகிகள் சந்தித்து, தேனி மாவட்டத்திற்கான வளர்ச்சித்திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தினர். தேனி மாவட்ட ஆட்சியர் திரு.முரளிதரன் IAS அவர்களைச் சந்தித்து, கிடப்பிலுள்ள பல்வேறு திட்டங்களை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டுமென பாஜக விவசாய அணி மாநில தலைவர் G.K.நாகராஜ் அவர்கள் கேட்டுக்கொண்டார். முல்லைப்பெரியாறு அணை வாய்க்காலிலிருந்து ரூ.256  கோடி திட்டமதிப்பில், குள்ளப்பகவுண்டன்பட்டி முதல் ஆண்டிபட்டி வரை பொதுப்பணித்துறையால் மதிப்பீடு செய்யப்பட்ட திட்டத்தை நிறைவேற்றி, 21 குளம்,குட்டைகளை நீர்நிரப்ப மாவட்ட ஆட்சியர் … Read more

தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வருகிற 2-ந் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, நெல்லையில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3,4 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் பகல் நேர … Read more

விலைவாசியைக் கட்டுப்படுத்துவதில் பாஜக அரசு படுதோல்வி அடைந்துள்ளது: முத்தரசன் விமர்சனம்

சென்னை: விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதில் மத்திய பாஜக அரசு படுதோல்வி அடைந்துள்ளது என்று தமிழக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக மத்திய அரசு பன்னாட்டு நிதி மூலதன சக்திகளுக்கும், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஆதரவானக் கொள்கைகளை தீவிரமாகி செயல்படுத்தி வருகிறது. கார்ப்பரேட்டுகளுக்கு வரிச் சலுகை வழங்கி வரும் பாஜக மத்திய அரசு மறைமுக வரி செலுத்தி வரும் … Read more

தரகராக செயற்பட வேண்டாம்! – லண்டனில் இருந்து சுமந்திரன் எம்.பிக்கு வேண்டுகோள்

இலங்கை அரசாங்கத்தின் தரகராக செயற்பட வேண்டாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து வெளியாகும் விடுதலைப் புலிகள் அமைப்பு சார்பான இணையத்தளம் ஒன்றினால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதான தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. புலம்பெயர் தமிழர்கள் சார்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த எம்.ஏ.சுமந்திரனுக்கு அதிகாரம் இல்லை என குறித்த இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியல் கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், எம்.ஏ. சுமந்திரன் லண்டன் வந்த போது தமிழ் … Read more

நள்ளிரவு முதல் சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது- அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

சென்னை: நாடு முழுவதும் டோல்கேட் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள சுங்க சாவடிகளில் நள்ளிரவு முதல் ரூ.5 முதல் ரூ.120 வரை கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.  நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் தமிழக சுங்க சாவடிகளை கடந்த வாகனங்களில் உயர்த்தப்பட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனை அறியாத சில வாகன ஓட்டிகளில் சுங்க சாவடி ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வை தொடர்ந்து, சரக்கு வாகனங்களுக்கான சுங்க கட்டணமும் … Read more

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தால் முல்லைப் பெரியாறு அணை பிரச்னையை தீர்க்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளை உச்ச நீதிமன்ற நீதிபதி கன்வீல்கர் அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த முறை இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, முல்லைப் பெரியாறு அணையின் கண்காணிப்புக் குழுவின் அதிகாரத்தை அதிகரிப்பது தொடர்பாக தமிழக, கேரள அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ‘முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை தேசிய அணைகள் … Read more

அதிர்ச்சி! வன்முறை செயல்களில் பெண்கள்: காஷ்மீரில் பயங்கரவாதிகள் சதி| Dinamalar

சதிஸ்ரீநகர்-பாதுகாப்புப் படைகளின் தீவிர கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால், ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் விரக்தியடைந்துள்ள பயங்கரவாதிகள், வன்முறை செயல்களில் பெண்களை ஈடுபடுத்தும் சதியில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 2019ல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜம்மு – காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இங்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது.இந்நிலையில், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக, ஜம்மு – காஷ்மீர் நிர்வாகமும், பாதுகாப்புப் படைகளும் தீவிர … Read more