கோத்தபயா வீட்டுக்கு வெளியே "அட்டாக்".. தீவிரவாதிகள் அட்டகாசம் இது.. அலறும் இலங்கை!

இலங்கையின் பொருளாதாரத்தை சீர்குலைத்து விட்ட ராஜபக்சே சகோதரர்கள் தற்போது மக்களின் கடும் கோபத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் அதிபர்
கோத்தபயா ராஜபக்சே
வீட்டுக்கு வெளியே நேற்று இரவு பெரும் வன்முறைத் தாக்குதல் நடைபெற்றது. இதற்குத் தீவிரவாதிகள்தான் காரணம் என்று
இலங்கை
அரசு கூறியுள்ளது.

இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. உலகம் முழுக்க ஊர்ப்பட்ட கடன்களை வாங்கிக் குவித்து விட்ட ராஜபக்சே சகோதரர்கள் மக்களிடமிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர். தங்களது கடன்களை அடைக்க இந்தியாவிடம் கடன் வாங்க ஆரம்பித்துள்ளனர்.

பொருளாதார சீர்குலைவால் இலங்கையில் பணவீக்கம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. விலைவாசி வின்னைத் தொட்டு நிற்கிறது. சாமானிய மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கின்றனர். நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. தலைநகர் கொழும்புவில் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு வேளை இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்தால்.. நவாஸ் ஷெரீப் தம்பி பிரதமராவார்

இந்த நிலையில் நேற்று இரவு அதிபர் கோத்தபயா ராஜபக்சே வீட்டுக்கு வெளியே பெரும் வன்முறைச் சம்பவம் நடந்தேறியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறையில் குதிக்கவே பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக இரும்புக் கம்பிகள், கட்டைகள் உள்ளிட்டவற்றுடன் போராட்டக்காரர்கள் அதிபரின் வீட்டை நோக்கி பேரணியாக திரண்டு வந்தனர். இதனால் அது வன்முறையாக மாறியது.

இந்த வன்முறைச் சம்பவத்தில் பல பொதுச் சொத்துக்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. அந்தப் பகுதியே போர்க்களம் போல காணப்பட்டது. இந்த மோதல் தொடர்பாக 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு நகரின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கோத்தபயா ராஜபக்சே உடனே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. வரலாறு காணாத பொருளாதார சீர்குலைக்கு இலங்கை தள்ளப்பட கோத்தபயாதான் காரணம் என்பது மக்களின் குற்றச்சாட்டாகும்.

2 பிரதமர்கள் சுட்டுக் கொலை.. ஒருவருக்கு தூக்கு.. பதற விடும் பாகிஸ்தான் அரசியல்!

இதற்கிடையே, கோத்தபயா வீடு அருகே நடந்த வன்முறைத் தாக்குதலுக்கு “
தீவிரவாதிகள்
” தான் காரணம் என்று இலங்கை அரசு கூறியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் பலரும் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸார் கூறியுள்ளனர். அரபு வசந்தம் போன்ற சூழலை இலங்கையில் ஏற்படுத்த தடை செய்யப்பட்ட அமைப்புகள் முயல்வதாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. காஸ் இல்லை, எரிபொருள் இல்லை, மின்வெட்டு வேறு அதிகமாகியுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கும் நிலைக்குப் போய் விட்டது என்பது நினைவிருக்கலாம்.

அடுத்த செய்திதினமும் எகிறி அடிக்கும் கொரோனா…நாடு முழுவதும் விரைவில் பொது முடக்கம்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.