சென்னையில் சொத்துவரி 150% வரை உயர்வு… உங்க வீட்டுக்கு எவ்வளவு வரி? முழு விவரம்

ஏப்ரல் 1-ம் தேதி முதல் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் சொத்த வரி விகிதங்களை மாற்றியமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் காரணமாக, சொத்து வரி விகிதம் சென்னையில் 150% ஆகவும், தமிழ்நாடு முழுவதும் பேரூராட்சி, நகராட்சிகளில் 50% முதல் 100% ஆகவும் உயரக்கூடும் என தெரிகிறது.

நகராட்சி நிர்வாகச் செயலர் ஷிவ்தாஸ் மீனா மார்ச் 30 தேதியிட்ட அரசிதழ் அறிவிப்பின்படி, பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் 600 சதுர அடிக்கு கீழ் உள்ள குடியிருப்புகளுக்கு 25% வரி உயர்த்தப்படும்.

அதேபோல், 600 சதுர அடி முதல் 1,200 சதுர அடி வரையிலான சொத்துகளுக்கான வரி உயர்வு 50% ஆக இருக்கும். ; 1,201 சதுர அடி முதல் 1,800 சதுர அடி வரையிலான சொத்துகளுக்கு 75%ஆகவும், 1,800 சதுர அடிக்கு மேல் உள்ள சொத்துகளுக்கான வரி விகிதம் 100 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

மேலும், சென்னை மற்றும் பிற மாநகராட்சிகளில் வரிகளை திருத்தம் செய்யுமாறு, சொத்து வரியை மாற்றியமைக்க நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிந்துரையின்படி, சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளின் சொத்து வரி 50 சதவீதம் முதல் 150 சதவீதமாக உயரும் என தெரிகிறது. அதேபோல், 2011 இல் சென்னையுடன் இணைக்கப்பட்ட புறநகர்ப் பகுதிகள் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள பிற மாநகராட்சிகளின் வரி விகிதங்கள் 50% முதல் 100% வரை உயரக்கூடும் என தெரிகிறது.

பெரும்பாலான மக்கள் 1,200 சதுர அடிக்கு கீழ் உள்ள கட்டிடங்களில் வசிப்பதால், வரி உயர்வு மக்களை பெரிய அளவில் பாதிக்காது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக நோக்கத்திற்கான கட்டடங்களுக்கு, 100 சதவீதமும், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு, 75 சதவீதமும் உயர்த்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் 600 சதுர அடியில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கான அதிகபட்ச சொத்து வரி ரூ.3,240ல் இருந்து ரூ.4,860 ஆக உயரக்கூடும்.

பெங்களூரில் இதே அளவுள்ள சொத்துக்கான வரி ரூ.8,860 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.15,984 ஆகவும், புனேவில் ரூ. ரூ.17,112 ஆகவும், மும்பையில் வரி விகிதம் ரூ.84,583 ஆகவும் உள்ளது. கோவையை பொறுத்தவரை, 600 சதுர அடி குடியிருப்பு கட்டிடத்திற்கான வரி விகிதம் ரூ.972இல் இருந்து ரூ.1,215 ஆக உயர்ந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.