பெட்ரோல், டீசல் விலை 80 பைசா உயர்வு.. 12 நாளில் 7.20 ரூபாய் உயர்வு..!

மத்திய அரசு வெள்ளிக்கிழமை எரிவாயு மற்றும் விமான எரிபொருள் விலையை மிகப்பெரிய அளவில் உயர்த்தி புதிய உச்சத்தை எட்டிய நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு லீவ் விட்டது. இந்நிலையில் சனிக்கிழமை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை சுமார் 80 பைசா உயர்த்தியுள்ளது எண்ணெய் நிறுவனங்கள்.

இதன் மூலம் 12 நாட்களில் எரிபொருள் விலை சுமார் 7.20 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

வீட்டு கடன் வாங்குவோர் ஷாக்.. ஏப்ரல் 1 முதல் ரூ.1.5 லட்சம் வரி சலுகை ரத்து.. மத்திய அரசு முடிவு..!

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் எவ்வளவு குறைந்தாலும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ரீடைல் விற்பனை நிறுவனங்கள் தொடர்ந்து விலையை உயர்த்தி வருகிறது.

இதனால் சாமானிய மக்கள் போக்குவரத்துக்காக மட்டும் அல்லாமல் பிற அனைத்தும் அத்தியாவசிய பொருட்களுக்கு அதிகப்படியான தொகையை செலவழித்து வருகின்றனர்.

 7.20 ரூபாய்

7.20 ரூபாய்

பெட்ரோல் விலை லிட்டருக்கு 7.20 ரூபாய் எனில் வேலைக்காவும், வர்த்தகத்திற்காகவும் ஒரு தனிநபர் ஒரு நாளுக்கு 1 லிட்டர் பெட்ரோல் பயன்படுத்துகிறார் என வைத்துக்கொண்டால் 30 நாளுக்கு 215 ரூபாய். ஏற்கனவே பெட்ரோல் விலை உச்சத்தில் இருக்கும் போது நாளுக்கு 108.21 ரூபாய் வீதம் மாதத்திற்கு 3,246.30 ரூபாய் ஒரு நடுத்தர குடும்பத்திற்கு பெரும் சுமை தான்.

 விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள்
 

விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள்

இதனால் தான் பெட்ரோல், டீசல் உயர்வால் விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் தங்களது பொருட்களின் விலையை பெரிய அளவில் உயர்த்தியுள்ளனர். இதன் வாயிலாகவும் நடுத்தர குடும்பங்கள் அதிகப்படியான சுமை எதிர்கொண்டு வருகிறது.

மக்களுக்கு கடும் பாதிப்பு

மக்களுக்கு கடும் பாதிப்பு

சம்பளத்தில் பெரிய அளவிலான உயர்வும் மாற்றமும் ஏற்படாத நிலையில் இந்த விலை வாசி உயர்வு மக்களை கடுமையாக வாட்டி வதைக்கிறது. குறிப்பாக உணவு பொருட்களின் விலை உயர்வு பல கோடி குடும்பங்களை பசியுடன் உட்கார வைத்துள்ளது.

மத்திய அரசு

மத்திய அரசு

கச்சா எண்ணெய் விலை 139 டாலர் வரையில் உயர்ந்த போது 5 மாநில தேர்தலுக்காக 137 நாள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் இருந்த மத்திய அரசு தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் போது தொடர்ந்து உயர்த்தி இழப்பை ஈடு செய்து வருகிறது.

பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை

டெல்லி – 102.61 ரூபாய்
கொல்கத்தா – 112.19 ரூபாய்
மும்பை – 117.57 ரூபாய்
சென்னை – 108.21 ரூபாய்
குர்கான் – 102.72 ரூபாய்
நொய்டா – 102.48 ரூபாய்
பெங்களூர் – 108.14 ரூபாய்
புவனேஸ்வர் – 109.5 ரூபாய்
சண்டிகர் – 101.99 ரூபாய்
ஹைதராபாத் – 116.33 ரூபாய்
ஜெய்ப்பூர் – 114.55 ரூபாய்
லக்னோ – 102.35 ரூபாய்
பாட்னா – 113.66 ரூபாய்
திருவனந்தபுரம் – 114.3 ரூபாய்

டீசல் விலை

டீசல் விலை

கொல்கத்தா – 97.02 ரூபாய்
மும்பை – 101.79 ரூபாய்
சென்னை – 98.28 ரூபாய்
குர்கான் – 93.97 ரூபாய்
நொய்டா – 94.04 ரூபாய்
பெங்களூர் – 92.05 ரூபாய்
புவனேஸ்வர் – 99.27 ரூபாய்
சண்டிகர் – 88.22 ரூபாய்
ஹைதராபாத் – 102.45 ரூபாய்
ஜெய்ப்பூர் – 97.7 ரூபாய்
லக்னோ – 93.92 ரூபாய்
பாட்னா – 98.58 ரூபாய்
திருவனந்தபுரம் – 101.15 ரூபாய்

தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை

தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை

அரியலூர் – 109.19 ரூபாய்
செங்கல்பட்டு – 108.4 ரூபாய்
சென்னை – 108.21 ரூபாய்
கோயம்புத்தூர் – 108.68 ரூபாய்
கடலூர் – 110.33 ரூபாய்
தருமபுரி – 109.56 ரூபாய்
திண்டுக்கல் – 108.98 ரூபாய்
ஈரோடு – 109.1 ரூபாய்
கள்ளக்குறிச்சி – 109.47 ரூபாய்
காஞ்சிபுரம் – 108.68 ரூபாய்
கன்னியாகுமரி – 109.06 ரூபாய்
கரூர் – 108.94 ரூபாய்
கிருஷ்ணகிரி – 109.68 ரூபாய்
மதுரை – 108.62 ரூபாய்
நாகப்பட்டினம் – 109.73 ரூபாய்
நாமக்கல் – 108.54 ரூபாய்
நீலகிரி – 110.36 ரூபாய்
பெரம்பலூர் – 109.1 ரூபாய்
புதுக்கோட்டை – 108.9 ரூபாய்
ராமநாதபுரம் – 109.38 ரூபாய்
ராணிப்பேட்டை – 109.3 ரூபாய்
சேலம் – 109.36 ரூபாய்
சிவகங்கை – 109.21 ரூபாய்
தேனி – 109.13 ரூபாய்
தென்காசி – 109.07 ரூபாய்
தஞ்சாவூர் – 109.33 ரூபாய்
திருவாரூர் – 109.2 ரூபாய்
திருச்சிராப்பள்ளி – 108.65 ரூபாய்
திருநெல்வேலி – 108.51 ரூபாய்
திருப்பத்தூர் – 110.27 ரூபாய்
திருப்பூர் – 108.63 ரூபாய்
திருவள்ளூர் – 108.28 ரூபாய்
திருவண்ணாமலை – 110.47 ரூபாய்
தூத்துக்குடி – 108.75 ரூபாய்
வேலூர் – 109.36 ரூபாய்
விழுப்புரம் – 109.94 ரூபாய்
விருதுநகர் – 108.86 ரூபாய்

தமிழ்நாட்டில் டீசல் விலை

தமிழ்நாட்டில் டீசல் விலை

அரியலூர் – 99.28 ரூபாய்
செங்கல்பட்டு – 98.46 ரூபாய்
சென்னை – 98.28 ரூபாய்
கோயம்புத்தூர் – 98.77 ரூபாய்
கடலூர் – 100.35 ரூபாய்
தருமபுரி – 99.63 ரூபாய்
திண்டுக்கல் – 99.07 ரூபாய்
ஈரோடு – 99.18 ரூபாய்
கள்ளக்குறிச்சி – 99.55 ரூபாய்
காஞ்சிபுரம் – 98.74 ரூபாய்
கன்னியாகுமரி – 99.17 ரூபாய்
கரூர் – 99.03 ரூபாய்
கிருஷ்ணகிரி – 99.75 ரூபாய்
மதுரை – 98.73 ரூபாய்
நாகப்பட்டினம் – 99.81 ரூபாய்
நாமக்கல் – 98.64 ரூபாய்
நீலகிரி – 100.29 ரூபாய்
பெரம்பலூர் – 99.2 ரூபாய்
புதுக்கோட்டை – 99 ரூபாய்
ராமநாதபுரம் – 99.47 ரூபாய்
ராணிப்பேட்டை – 99.34 ரூபாய்
சேலம் – 99.44 ரூபாய்
சிவகங்கை – 99.3 ரூபாய்
தேனி – 99.23 ரூபாய்
தென்காசி – 99.18 ரூபாய்
தஞ்சாவூர் – 99.42 ரூபாய்
திருவாரூர் – 99.29 ரூபாய்
திருச்சிராப்பள்ளி – 98.76 ரூபாய்
திருநெல்வேலி – 98.64 ரூபாய்
திருப்பத்தூர் – 100.29 ரூபாய்
திருப்பூர் – 98.71 ரூபாய்
திருவள்ளூர் – 98.35 ரூபாய்
திருவண்ணாமலை – 100.49 ரூபாய்
தூத்துக்குடி – 98.87 ரூபாய்
வேலூர் – 99.4 ரூபாய்
விழுப்புரம் – 99.97 ரூபாய்
விருதுநகர் – 98.96 ரூபாய்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Petrol, diesel price hiked 80 paise on April 2; increased 7.20 rupees in 12 days

Petrol, diesel price hiked 80 paise on April 2; increased 7.20 rupees in 12 days பெட்ரோல், டீசல் விலை: 12 நாளில் 7.20 ரூபாய் உயர்வு..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.