அமேசானில் தொழிற்சங்கம் துவக்கம்| Dinamalar

வாஷிங்டன்:தொழில்நுட்ப நிறுவனமான ‘அமேசான்’ ஊழியர்கள் தொழிற்சங்கம் துவக்கும் முயற்சியில் வெற்றி அடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமேசான் நிறுவனம் தொழில்நுட்பம் ‘ஆன் – லைன்’ வர்த்தகம் ஆகியவற்றில் கோலோச்சி வருகிறது. கடந்த 1994ல் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தில் உலகம் முழுதும் லட்சக்கணக்கானோர் பணி புரிகின்றனர்.

இந்நிலையில் இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் துவங்க அமேசான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நியூயார்க் நகரில் உள்ள ஒரு கிடங்கில் பணிபுரியும் 55 சதவீத தொழிலாளர்கள் சங்கம் துவக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். இதையடுத்து தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கும் நிலைக்கு அமேசான் நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.