ஹலாலுக்கு போட்டியாக ஜட்கா| Dinamalar

பெங்களூரு : பெங்களூரில் ‘ஹலால்’ இறைச்சிக்கு போட்டியாக ‘ஜட்கா’ இறைச்சி குறித்து ஹிந்து அமைப்பினர் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். ‘ஜட்கா’ இறைச்சி இலவச டோர் டெலிவரி தரப்படும் என அறிவித்துள்ளனர்.கர்நாடகாவில் முஸ்லிம்களின் ‘ஹலால்’ இறைச்சியை புறக்கணிக்க வேண்டும் என்ற இயக்கம் ஆரம்பமாகி உள்ளது.

அதற்கு போட்டியாக பெங்களூரில் ‘ஜட்கா’ இறைச்சி குறித்து ஹிந்து அமைப்பினர் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.எந்த ஒரு விலங்கையும் ஒரே முறையில் ஆயுதத்தால் வெட்டி கொல்லப்படும் முறை ‘ஜட்கா’ எனப்படுகிறது. இதில் குறைந்தபட்ச துன்புறுத்தல் மட்டுமே இருக்கும்.’ஜட்கா’ இறைச்சி கடைகளில் அதிரடி விலை குறைப்பை அறிவித்துள்ளதுடன், எட்டு கி.மீ., வரை இலவச டோர் டெலிவரி அறிவிக்கப்பட்டுள்ளது.பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதியில் எப்போதும் இறைச்சியை வாங்க கூட்டம் குவியும். ஆனால் ஹிந்துக்களின் விழிப்புணர்வால் என்ன ஆகும் என தெரியவில்லை.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.