இனி சிம் கார்டு தேவையில்லை – Android 13 கொண்டுவரும் புதிய அம்சம்!

கூகுள் நிறுவனம் தனது அடுத்த Android பதிப்பை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கிடையில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் குறித்த தகவல்களும், வதந்திகளும் இணையத்தில் உலா வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், புதிய ஆண்ட்ராய்டு பதிப்பு குறித்து புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

இந்த தகவல் பயனர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த வசதியை குறித்தது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பிரீமியம் மொபைல் போன்கள்,
eSIM
வசதியை அளிக்கிறது. வரும் காலங்களில் இந்த தொழில்நுட்பம் தான், அனைத்து போன்களிலும் இருக்கும் என டெக் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

அந்த இ-சிம் வசதிக்கான சிறந்த தொழில்நுட்ப உதவியை வெளியாக இருக்கும் ஆண்ட்ராய்டு 13 பதிப்பு அளிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, ஒரு eSIM-இல், இரண்டு நெட்வொர்க்குகளை நாம் பயன்படுத்த முடியும்.

காசே இல்லாம IRCTC ரயில் டிக்கெட்! பேடிஎம் அதிரடி!

ஆண்ட்ராய்டு 13 அப்டேட்

தற்போது பயன்பாட்டில் இருக்கும் eSIM தொழில்நுட்பத்தால், ஒரு நெட்வொர்க்கை மட்டுமே ஒற்றை சிப்புடன் இணைக்க முடியும். கூகுள் நிறுவனமோ, ஒற்றை இ-சிம் சிப் உதவியுடன் இரண்டு நெட்வொர்க்குகளை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில் இந்த தொழில்நுட்பத்திற்கான காப்புரிமையை கூகுள் பெற்றுள்ளது. மேலும் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ஆண்ட்ராய்டு 13 இன் இறுதி வெளியீட்டில் இதை நிறுவனம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 13 தவிர, காப்புரிமை பயன்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, iOS, macOS மற்றும் Windows ஆகிய இயங்குதளங்கள் கொண்டு செயல்படும் பிற சாதனங்களுக்கும் MEP (Multiple Enable Profiles)க்கான ஆதரவு கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ள 6 புதிய அம்சங்கள்!

கூகுள் நிறுவனத்தின் பிரத்யேக பிக்சல் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்த புதிய அம்சத்திற்காக சோதிக்கப்பட்டு வருவதாகவும், கூகுள் இந்த தொழில்நுட்பத்துக்கான உரிமத்தைப் பிற நிறுவனங்களுக்கும் வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 13 இன் இரண்டு அம்சங்கள் ஏற்கனவே ஆன்லைனில் கசிந்துள்ளன. இதில் ஃபிளாஷ்லைட்டின் பிரகாச அளவைக் கட்டுப்படுத்துவதற்கான ஆதரவு மற்றும் நோட்டிப்பிகேஷனை ஸ்பிளிட் ஸ்கிரீனில் இழுத்து வைத்துப் பயன்படுத்தும் அம்சமும் அடங்கும்.

eSIM என்றால் என்ன?

இ-சிம் என்றால் வேறு மாதிரியான புதுமையான தொழில்நுட்பம் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். இதுவும் ஒருவகை சிம் கார்டுதான். ஆனால், ஏற்கனவே ஸ்மார்ட்போனின் சிப்செட்டில் பொருத்தப்பட்டிருக்கும். இந்த சிம் கார்டை நீங்கள் வெளியே எடுக்கவோ, மாற்றவோ முடியாது.

அதாவது, நீங்கள் ஒரு ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு முன்னரே அதனுள் இந்த இ-சிம் பொருத்தப்பட்டிருக்கும். உங்களுக்குத் தேவையான மொபைல் ஆபரேட்டரை இதில் இணைத்துக் கொள்ளவேண்டும். ஸ்மார்ட்போன்கள் மெலிதாக மாறி வரும் காலகட்டத்தில், அதன் வடிவமைப்பிற்கு மேலும் வலு சேர்க்கிறது இந்த இ-சிம் கார்டு தொழில்நுட்பம்.

Google-Pixel விவரங்கள்முழு அம்சங்கள்ஃபெர்பார்மன்ஸ்Snapdragon 821சேமிப்பகம்32 GBகேமரா12.3 MPபேட்டரி2770 mAhடிஸ்பிளே5.0″ (12.7 cm)ரேம்4 GBமுழு அம்சங்கள்
Google-PixelGoogle Pixel 128GB
அடுத்த செய்திவாடிக்கையாளர்களை கதறவிடும் சாம்சங் – மேலும் ஒரு புதிய 5ஜி போன் அறிமுகம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.