இந்தியாவுக்கு நல்ல காலம்.. இனி ஏறுமுகம் தான்.. தமிழ்நாட்டின் நிலை என்ன தெரியுமா..?!

இந்திய மக்களையும், இந்திய பொருளாதாரத்தையும் ஆட்டிப்படைத்து வந்த கொரோனா, ஒமிக்ரான் தொற்றுப் பாதிப்புகள் கடந்த 6 மாதத்தில் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் நாட்டின் வர்த்தகம், உற்பத்தி, ஏற்றுமதி ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால் இந்தியாவின் வேவைவாய்ப்பின்மை அளவு குறைந்து தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது என CMIE தரவுகள் கூறுகிறது.

சென்னை மக்களுக்கு ஜாக்பாட்..! 300 ஏக்கரில் சிப் தொழிற்சாலை.. பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு..!

CMIE அமைப்பு

CMIE அமைப்பு

இந்திய வேலைவாய்ப்பு சந்தையைக் கண்காணிக்கும் CMIE அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகள் அடிப்படையில், பிப்ரவரி 2022ல் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை 8.10 சதவீதமாக இருந்த நிலையில், மார்ச் மாதம் 7.6 சதவீதமாகச் சரிந்துள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்புச் சந்தையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது தெரிகிறது.

ஏப்ரல் மாதமும் அசத்தல்

ஏப்ரல் மாதமும் அசத்தல்

இதேபோல் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி இதன் அளவு 7.6 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாகச் சரிந்தது. இதில் பெரு நகரங்களில் வேலைவாய்ப்பின்மை 8.5 சதவீதமாகவும், கிராமப்புறத்தில் அதன் அளவீடு 7.1 சதவீதமாகவும் உள்ளது.

ஆனா இது மோசம்
 

ஆனா இது மோசம்

ஆனால் இந்தியா போன்ற நாட்டிற்கு 7.6 சதவீதம் என்பதும் மோசமான அளவீடு தான் என இந்தியப் புள்ளியியல் அமைப்பின் ஓய்வு பெற்ற பொருளாதாரப் பேராசிரியர் அபிரூப் சர்க்கார் கூறியுள்ளார். மேலும் வேலைவாய்ப்பின்மை குறைவது மூலம் இந்தியாவில் வர்த்தகம், பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதை உறுதி செய்துள்ளது.

தமிழ்நாடு

தமிழ்நாடு

மார்ச் மாத தரவுகள் படி ஹரியானாவில் வேலைவாய்ப்பின்மை அதிகப்படியாக 26.7 சதவீதமாக உள்ளது. இதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மற்றும் ராஜஸ்தானில் தலா 25 சதவீதம் பதிவாகியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இந்தியாவின் சராசரி அளவான 7.6 சதவீதத்துடன் குறைவாக 4.1 சதவீதமாக மட்டுமே உள்ளது.

இந்தியா-வின் முழுத் தரவுகள்

இந்தியா-வின் முழுத் தரவுகள்

  • ஹரியானா – 26.7 சதவீதம்
  • ஜம்மு & காஷ்மீர் – 25 சதவீதம்
  • ராஜஸ்தான் – 25 சதவீதம்
  • ஜார்கண்ட் – 14.5 சதவீதம்
  • பீகார் – 14.4 சதவீதம்
  • திரிபுரா – 14.1 சதவீதம்
  • ஹிமாச்சல பிரதேசம் – 12.1 சதவீதம்
  • ஒடிசா – 9.7 சதவீதம்
  • ஆந்திரப் பிரதேசம் – 9.2 சதவீதம்
  • டெல்லி – 8.9 சதவீதம்
  • அசாம் – 7.7 சதவீதம்
  • பஞ்சாப் – 7 சதவீதம்
  • தெலுங்கானா – 6.8 சதவீதம்
  • கேரளா – 6.7 சதவீதம்
  • மேற்கு வங்காளம் – 5.6 சதவீதம்
  • உத்தரப்பிரதேசம் – 4.4 சதவீதம்
  • புதுச்சேரி – 4.2 சதவீதம்
  • தமிழ்நாடு – 4.1 சதவீதம்
  • மகாராஷ்டிரா – 4 சதவீதம்
  • உத்தரகண்ட் – 3.5 சதவீதம்
  • குஜராத் – 1.8 சதவீதம்
  • கர்நாடகா – 1.8 சதவீதம்
  • மேகாலயா – 1.8 சதவீதம்
  • மத்திய பிரதேசம் – 1.4 சதவீதம்
  • சத்தீஸ்கர் – 0.6 சதவீதம்

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Good Sign for India Economy; Unemployment rate falls in March says CMIE

Good Sign for India’s Economy as the Unemployment rate falls in March shows economic activity growth so new jobs were created. Price inflation affects the consumer market in march, even though the Unemployment rate falls is a good sign for economic growth. இந்தியாவுக்கு நல்ல காலம்.. இனி ஏறுமுகம் தான்.. தமிழ்நாட்டின் நிலை என்ன தெரியுமா..?!

Story first published: Monday, April 4, 2022, 14:31 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.