இலங்கை பங்குச்சந்தை திடீர் முடக்கம்.. என்ன நடந்தது..?!

இலங்கையை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப்போட்டு உள்ள பொருளாதார நெருக்கடியில் பல அமைச்சர்கள் பதவி விலகி வரும் நிலையில், மக்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்த அவசர நிலை அறிவிக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் நிலை உருவாகியுள்ளது.

இன்று காலை இலங்கை பங்குச்சந்தை வர்த்தகம் துவங்கிய சில நொடிகளில் 6 சதவீதம் சரிந்த காரணத்தால், திடீர் முடிவாக இலங்கை பங்குச்சந்தையில் வர்த்தகம் நிறுத்தப்பட்டது. இது மக்கள் மத்தியில் கூடுதலான பாதிப்பை ஏற்படுத்தியது.

அரசியல் குழப்பம்

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் அரசியல் குழப்பம் உச்சத்தில் உள்ள நிலையில், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே திங்கட்கிழமை புதிய அமைச்சரவையை நியமித்துள்ள நிலையில், புதிய இடைக்கால அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

மக்கள் புரட்சி

மக்கள் புரட்சி

அந்நாட்டில் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப் பற்றாக்குறை, விலைவாசி உயர்வுக்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில் மக்கள் புரட்சி மிகப்பெரிய அளவில் வெடிக்கும் முன்பு இப்புதிய அமைச்சரவை மூலம் பாதுகாப்புப் படைகள் தயாராக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்நாட்டில் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில் மக்கள் புரட்சி மிகப்பெரிய அளவில் வெடுக்கும் முன்பு இப்புதிய அமைச்சரவை மூலம் பாதுகாப்புப் படைகள் தயாராக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாமல் ராஜபக்சே
 

நாமல் ராஜபக்சே

இதற்கிடையில் இலங்கை பிரதமரின் மகன் நாமல் ராஜபக்சே திங்கள்கிழமை அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்தார். நாமல் ராஜபக்சே உடன் பல உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்த காரணத்தால் புதிய அமைச்சரவையை அந்நாட்டு ஜனாதிபதி நியமித்தார்.

 பங்குச்சந்தை முடக்கம்

பங்குச்சந்தை முடக்கம்

இந்தப் பிரச்சனைக்கு மத்தியில் வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் துவங்கியது. ஆனால் சில நிமிடங்களிலேயே பங்குச்சந்தை 5.6 சதவீதம் வரையில் சரிந்த காரணத்தால், பெரும் சரிவைச் சந்திக்கும் முன்பு பங்குச்சந்தையில் வர்த்தகம் நிறுத்தப்பட்டது.

 இலங்கை

இலங்கை

இலங்கையில் ஒருபக்கம் விலைவாசி உயர்வால் மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில், மறுபக்கம் அரசியலில் பல பிரச்சனைகள் அடுத்தடுத்து வெடித்து வருகிறது. இந்த நிலையில் இருந்து இலங்கை மீண்டு வருவது என்பது மிகவும் கடினம், இந்தியா பணமாகவும், பொருட்களாகவும் பல உதவிகளைச் செய்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Sri Lanka Stock Exchange Trading Halts After 5.6% Fall amid economic crisis and political crisis

Sri Lanka Stock Exchange on Monday Halts Trading After 5.6 percent Fall in just a few seconds of morning trading. This drastic fall happens amid Sri Lanka’s economic crisis and Sri Lanka political crisis இலங்கை பங்குச்சந்தை திடீர் மூடக்கம்.. என்ன நடந்தது..?!

Story first published: Monday, April 4, 2022, 15:36 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.