உக்ரைனின் உதவி கோரிக்கைக்கு கைவிரித்த ஜேர்மனி!


ரஷ்ய படைகளை எதிர்கொள்ள உதவியாக உக்ரைன் கோரிகை விடுத்திருந்த Marder IFV வானங்களை வழங்க ஜேர்மனி மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைனுக்கு 100 Marder IFV காலாட்படை சண்டை வாகனங்களை வழங்குவதற்கான கீவின் கோரிக்கையை பெர்லின் நிராகரித்தது என்று ஜேர்மன் ஊடகமான Welt பாதுகாப்பு ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை, உக்ரேனிய பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு 100 மார்டர் வகை IFV வாகனங்கள் மற்றும் பிற கனரக ஆயுதங்களைக் கேட்டு கடிதம் அனுப்பினார்.

ரஷ்யாவின் Sukhoi-SU 35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்ரைன்! வெளியான புகைப்பட ஆதாரங்கள் 

அதற்கு, ஜேர்மன் பாதுகாப்பு மந்திரி Christine Lambrecht Reznikov உடனான தொலைபேசி உரையாடலில் கோரிக்கையை நிராகரித்ததாக உக்ரைனின் ஆதாரங்கள் தெரிவித்ததாக Welt கூறியுள்ளது.

முன்னதாக, ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சகம் வெல்ட்டிடம் கியேவின் கோரிக்கையைப் பெற்றதை உறுதிப்படுத்தியது, அனைத்து மார்டர் IFV-களும் நேட்டோ கடமைகளுக்குக் கட்டுப்பட்டவை, எனவே இது குறித்து பிரச்சினைகள் நேட்டோவுக்குள் தீர்க்கப்பட வேண்டும் என்று கூறியது.

இலங்கையில் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா; மகிந்த ராஜபக்ச பிரதமராக நீடிப்பு 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.