திமுக அரசு பொறுப்பேற்று 11 மாதங்களில் தமிழகத்துக்கு ரூ.68,375 கோடி முதலீடுகள் ஈர்ப்பு: 2.05 லட்சம் வேலைவாய்ப்பு உருவாகும் என முதல்வர் பெருமிதம்

சென்னை: திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை ரூ.68,375.54 கோடிமதிப்புள்ள 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன்மூலம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 402 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அதன்மூலம் எவ்வளவு கோடி முதலீடுகள் வரும் எனவும் முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:

முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழகத்தை மாற்றி, மாநில வளர்ச்சிக்கும் தமிழக இளைஞர்களின் எதிர்காலத்துக்கும் துணைநிற்கும் திமுக அரசின் செயல்பாடுகள்தான் ‘திராவிட மாடல்’ ஆகும். நமது அரசு பொறுப்பேற்ற பிறகுமேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களே நமது வளர்ச்சிக்கான அடித்தளம்.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம் 68,375 கோடியே 54 லட்சம் மதிப்புள்ள முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இவற்றால் 2 லட்சத்து 5 ஆயிரத்து 402பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். 2021-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட 35 புரிந்துணர்வு ஒப்பந்தங்களால் ரூ.17,141 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 55,054 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.

அதே ஆண்டு செப்.11-ம் தேதிடிபி.வேர்டு நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் ரூ.2 ஆயிரம் கோடி ஈர்க்கப்பட்டு, 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. செப்.22-ம் தேதி 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.1,880 கோடியே54 லட்சம் முதலீடு ஈர்க்கப்பட்டு, 39 ஆயிரத்து 150 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.

நவம்பர் 22-ம் தேதி 59 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.35,208 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 76,795 வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.

2022-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ரூ.4,488 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 15,103 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதே மாதம் சாம்சங் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு, அதன்மூலம் ரூ.1,558 கோடிமுதலீடுகள் ஈர்க்கப்பட்டன. அதனால், 600 வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.

துபாய் சுற்றுப்பயணம்

கடந்த மாதம் 26-ம் தேதி முதல்28-ம் தேதி வரை துபாய் சுற்றுப்பயணத்தின் மூலம் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ரூ.6,100 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 14,700 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

2020-ம் ஆண்டு ஏப்ரல் முதல்டிசம்பர் வரையிலான காலத்துடன் ஒப்பிடும்போது 2021-ம் ஆண்டு அந்நிய நேரடி முதலீடு ரூ.17,696கோடி (41.5 சதவீதம்) அதிகரித்துள்ளது. அதில், 2021-ம் ஆண்டு அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ரூ.9,332 கோடி (53 சதவீதம்) அதிகரித்துள்ளது. இவ்வாறு முதல்வர் பதிவிட் டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.