பள்ளிகளில் சிறப்புக் குழு; ஆசிரியர்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க அரசு நடவடிக்கை

Tamilnadu schools to have Special Supervisor for attacks against teachers: அரசு பள்ளிகளில் சமீபகாலமாக அதிகரித்து வரும் ஆசிரியர்களுக்கு எதிரான வன்முறைகளைக் கருத்தில் கொண்டு, ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்க அனைத்து பள்ளிகளிலும் ஒரு மேற்பார்வையாளர் அல்லது குழுவை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் பள்ளிகளுக்கு ஆலோசனை நிபுணர்கள், அவ்வப்போது வந்து செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பள்ளிக் கல்வித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 2021 முதல், கொரோனா காரணமாக பள்ளிகள் குறைந்த காலம் மட்டுமே செயல்பட்டாலும், ஆசிரியர்களுக்கு எதிரான 10க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த சம்பவங்களில் ஈடுபட்ட பெரும்பாலானோர் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள். டிசம்பர் 2021 இல், ஓசூர் மாசிநாயக்கன்பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவர் ஆங்கில ஆசிரியரை அறைந்தார். அதே மாதம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பாலியல் துன்புறுத்தல் புகாரைத் தொடர்ந்து மற்றொரு 8 ஆம் வகுப்பு ஆசிரியர் ஒரு கும்பலால் தாக்கப்பட்டார். இந்த ஆண்டு மார்ச் மாதம், சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் ஒரு மாணவர் தனது தலைமுடியை வெட்டச் சொன்ன தனது ஆசிரியரைத் தாக்க முயன்றார், என்று கூறினார்.

இதையும் படியுங்கள்: பொதுமக்கள் பாதுகாப்பிற்காக காவல் உதவி செயலி; 60 சிறப்பு வசதிகள் என்னென்ன?

மேலும், பள்ளி தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள் அல்லது ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் அடங்கிய குழு மூலம், இதுபோன்ற கோபமடைந்து வன்முறைகளில் ஈடுபடும் மாணவர்களைக் கையாளவும், அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்கவும் விரும்புகிறார்கள். ‘ஆசிரியர்களின் வேலைவாய்ப்பு பாதுகாப்பு விதியை’ கொண்டு வருவது குறித்தும் அரசு ஆலோசித்து வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

சமீபத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

கொரோனா காரணமாக 2020 மார்ச் முதல் பள்ளிகள் செயல்பட வில்லை. மேலும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தனியார் பள்ளிகளைப் போல ஆன்லைன் வகுப்புகள் கூட நடத்தப்படுவது இல்லை.  இந்தநிலையில் திடீரென பள்ளி திறந்து மாணவர்களுக்கு ஒழுக்க கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுவதால், அவர்கள் விரக்தி அடைந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களை கவனமாகக் கையாள வேண்டும், என்று கவுன்சிலிங் வழங்கும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.