பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் நீடிப்பார்: ஜனாதிபதி அறிவிப்பு!

பாகிஸ்தான்
எதிர்க்கட்சிகள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில்
இம்ரான் கான்
அரசு மீது கடந்த மாதம் 28ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் வெற்றி பெற வேண்டுமானால் மொத்தம் உள்ள 342 எம்.பி.க்களில் 172 பேரின் ஆதரவை பெற வேண்டும். ஆனால் இப்போது எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக 200 எம்.பி.க்களும், இம்ரான் கானுக்கு ஆதரவாக 140 எம்.பி.க்கள் இருப்பதாக தெரிகிறது.

இதனால் இம்ரான் கான் அரசு பெரும்பான்மையை இழந்து கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த சூழலில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பு நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதற்காக அந்நாட்டு நாடாளுமன்றம் கூடியபோது, எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை ரத்து செய்வதாக நாடாளுமன்ற துணை சபாநாயகர் காசிம் சூரி அறிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் தீர்மானத்தை துணை சபாநாயகர் நிராகரித்தது செல்லாது. ஷெபாஸ் ஷெரீப்பை நாட்டின் புதிய பிரதமராக நியமிப்பதாக அறிவித்தனர். இதனால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஏப்ரல் 25ஆம் தேதி வரை பாகிஸ்தான் நாடாளுமன்றம் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

புதிய பிரதமர்: பாக்., எதிர்க்கட்சிகள் அறிவிப்பால் குழப்பம்!

இதனிடையே, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று அதிபர் ஆரிப் ஆல்விக்கு பிரதமர் இம்ரான் கான் கடிதம் எழுதினார். மேலும், பாகிஸ்தான் மக்கள் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, பிரதமர் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அதிபர் ஆரிப் ஆல்வி உடனடியாக அறிவித்துள்ளார். இன்னும் 90 நாட்களில் பாகிஸ்தானில் தேர்தல் நடத்தப்படும் என்று தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் பரூக் ஹபீப் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் நீடிப்பார் என அந்நாட்டு ஜனாதிபதி ஆரிப் ஆல்வி அறிவித்துள்ளார். காபந்து பிரதமர் அறிவிக்கப்படும் வரை இம்ரான் கான் பிரதமராக நீடிப்பார் என ஆரிப் ஆல்வி அறிவித்துள்ளார். இம்ரான் கான் பிரதமர் இல்லை என்று பாகிஸ்தான் அமைச்சரவை செயலாளர் அறிவித்த நிலையில் புதிய அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

அடுத்த செய்தி”அவர்கள் முதலில் தமிழர்களிடம் வந்தார்கள்”.. சிங்களர்கள் குமுறல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.