பான்–இந்தியாவில் அடியெடுத்து வைக்கும் விஜய்

2022ம் ஆண்டில் எது பிரபலமானதோ இல்லையோ 'பான்–இந்தியா' என்பது சினிமா வட்டாரங்களில் பிரபலமானது. கடந்த வருடக் கடைசியில் வெளிவந்த தெலுங்குப் படமான 'புஷ்பா' பான்–இந்தியா படமாக வெளியாக வசூலைக் குவித்தது. அதற்கடுத்து கடந்த மாதம் வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படமும் வசூலைக் குவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், தென்னிந்தியாவிலிருந்து 1000 கோடி வசூலுக்கும் மேல் வாரிக்குவித்த 'பான்–இந்தியா'வை இங்கு பிரபலமாக்கிய பிரபாஸ் நடித்து கடந்த மாதம் வெளிவந்த 'ராதே ஷ்யாம்' தோல்வியைச் சந்தித்தது.

அடுத்து வரும் ஏப்ரல் 13ம் தேதி விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' தமிழ்ப் படமும், 14ம் தேதி வெளியாக உள்ள 'கேஜிஎப் 2' கன்னடப் படமும் பான்–இந்தியா படங்களாக வெளியாக உள்ளன.

'கேஜிஎப் 2' டிரைலர் கடந்த வாரம் 5 மொழிகளில் வெளியாகி 160 மில்லியன் பார்வைகளைக் கடந்துவிட்டது. விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் தமிழ் டிரைலர் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி 30 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அடுத்து 'பீஸ்ட்' ஹிந்தி டிரைலர் மாலை 6 மணிக்கு வெளியானது. தெலுங்கு டிரைலர் ஏப்ரல் 5 ம் தேதி வெளியாகிறது.

அதற்கு முன்பாக மாலை 4 மணிக்கு 'அரபிக்குத்து' பாடல் ஹிந்தி, தெலுங்கில் வெளியாக உள்ளது. இரண்டு மொழி டிரைலர்களும், பாடல்களும் சில பல மில்லியன் பார்வைகளைக் கடந்து விஜய்யும் 'பான்–இந்தியா' நடிகராக பிரபலமாவார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.