பிரதமர் மோடி ஆட்சிக்கு சிக்கல்: உயர் அதிகாரிகள் ரிப்போர்ட்!

கொரோனா தொற்றுக்கு பின்னர், பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை இலங்கை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் கடுமையான
பொருளாதார நெருக்கடி
ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது.

இந்த நிலையில், பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்டு உள்ள ஜனரஞ்சகமான நலத்திட்டங்களால், இலங்கை, கிரீஸ் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி போன்று இந்தியாவிலும் உருவாகலாம் என பிரதமர் நரேந்திர மோடி உடனான உயர் மட்ட ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு துறை செயலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசின் பல்வேறு துறை செயலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமரின் முதன்மை செயலர் பி.கே.மிஸ்ரா, அமைச்சரவை செயலர் ராஜிவ் கவுபா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அப்போது, பெரிய வளர்ச்சித் திட்டங்களை முன் எடுக்காததற்கு வறுமையை காரணமாக கூறும் பழங்கதையை கைவிட்டு, புதிய கண்ணோட்டத்தைக் கடைப்பிடிக்கும்படி, அதிகாரிகளிடம் பிரதமர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பேசிய
உயர்மட்ட அதிகாரிகள்
, சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த மாநிலங்கள் உட்பட, பல்வேறு மாநிலங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ள ஜனரஞ்சகமான சில திட்டங்கள், பொருளாதார ரீதியாக நீடிக்க முடியாதவை என்று சுட்டிக்காட்டியதாக தெரிகிறது.

மேலும், இந்த திட்டங்களால் இலங்கை, கிரீஸ் ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ளதை போன்ற பொருளாதார நெருக்கடி நம் நாட்டிலும் ஏற்படக் கூடிய அபாயம் உள்ளது எனவும் பிரதமர் மோடியிடன் உயர்மட்ட அதிகாரிகள் வெளிப்படையாக தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த செய்திஉங்களுக்கே தெரியாமல் உங்க பாக்கெட்டில் இருந்து போன ரூ.1 லட்சம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.