பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.8.40 உயர்வு.. 12வது முறை விலை உயர்வு..!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 99 டாலருக்குக் கீழ் சரிந்துள்ள போதிலும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா சுத்திகரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இந்த விலை உயர்வின் காரணமாக அனைத்து உற்பத்தி மற்றும் நுகர்வோர் நிறுவனங்களும் தங்களது தயாரிப்பின் விலையை உயர்த்தி வருகிறது.

இதனால் அனைத்து பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து சாமானிய மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை 80 பைசா உயர்வு.. 12 நாளில் 7.20 ரூபாய் உயர்வு..!

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா சுத்திகரிப்பு மற்றும் ரீடைல் எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பின் படி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 40 பைசா உயர்த்தியுள்ளது. இதன் மூலம் 12 முறை விலை உயர்வின் வாயிலாக எரிபொருள் விலை 8.40 ரூபாய் அதிகரித்துள்ளது.

மாநில அரசு முயற்சி

மாநில அரசு முயற்சி

இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய அரசு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில்ல வழக்கம் போல் மாநில அரசுகள் எரிபொருள் மீதான வரியைக் குறைக்கத் திட்டமிட்டு வருகிறது. ஆனால் ஜிஎஸ்டி அமலாக்கம் செய்த பின்பு வரி வருமானத்தில் அதிகப்படியான பாதிப்பு ஏற்பட்ட நிலையில் வரிக் குறைப்பைச் செய்ய முடியாத இக்கட்டான நிலையில் சிக்கியுள்ளது.

12 முறை விலை உயர்வு
 

12 முறை விலை உயர்வு

மத்திய அரசு 5 மாநில தேர்தலுக்காக 137 நாட்களாகப் பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான உயர்வையும் அறிவிக்காத நிலையில் மார்ச் 22ஆம் தேதி முதல் இன்று வரை சுமார் 12 நாள் விலையை உயர்த்தியுள்ளது.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

சர்வதேச சந்தையில் WTI கச்சா எண்ணெய் விலை 0.12 சதவீதம் அதிகரித்து 99.39 டாலராகவும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.13 சதவீதம் அதிகரித்து 104.5 டாலராக உள்ளது. 139 டாலரில் இருந்து 99 டாலர் வரையில் குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

ரஷ்யா எண்ணெய்

ரஷ்யா எண்ணெய்

மேலும் ரஷ்யா கொடுக்கும் தள்ளுபடி கச்சா எண்ணெய் ஜூன் இறுதியில் அல்லது ஜூலை மாதத்தில் தான் இந்தியாவுக்குக் கிடைக்கும், இதனால் ஜூலை மாதத்திற்குப் பின்பு பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் டாலர் மதிப்பும் வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் பெட்ரோல் டீசல் விலை

சென்னையில் பெட்ரோல் டீசல் விலை

இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 109.34 ரூபாயாகவும், டீசல் விலை ஒரு லிட்டர் 99.42 ரூபாயாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் போக்குவரத்துக்கான கட்டணம் பொருந்து எரிபொருள் விலை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாறுபடும். இதன் படி எந்த மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை என்ன

தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை

தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை

  • அரியலூர் – 110.33 ரூபாய்
  • செங்கல்பட்டு – 109.53 ரூபாய்
  • சென்னை – 109.34 ரூபாய்
  • கோயம்புத்தூர் – 109.97 ரூபாய்
  • கடலூர் – 110.71 ரூபாய்
  • தருமபுரி – 110.56 ரூபாய்
  • திண்டுக்கல் – 110.42 ரூபாய்
  • ஈரோடு – 109.82 ரூபாய்
  • கள்ளக்குறிச்சி – 111.57 ரூபாய்
  • காஞ்சிபுரம் – 110.07 ரூபாய்
  • கன்னியாகுமரி – 110.11 ரூபாய்
  • கரூர் – 109.75 ரூபாய்
  • கிருஷ்ணகிரி – 111.12 ரூபாய்
  • மதுரை – 109.95 ரூபாய்
  • நாகப்பட்டினம் – 110.83 ரூபாய்
  • நாமக்கல் – 109.97 ரூபாய்
  • நீலகிரி – 111.5 ரூபாய்
  • பெரம்பலூர் – 110.35 ரூபாய்
  • புதுக்கோட்டை – 110.38 ரூபாய்
  • ராமநாதபுரம் – 110.94 ரூபாய்
  • ராணிப்பேட்டை – 110.32 ரூபாய்
  • சேலம் – 110.61 ரூபாய்
  • சிவகங்கை – 110.18 ரூபாய்
  • தேனி – 110.72 ரூபாய்
  • தென்காசி – 109.9 ரூபாய்
  • தஞ்சாவூர் – 110.1 ரூபாய்
  • திருவாரூர் – 110.42 ரூபாய்
  • திருச்சிராப்பள்ளி – 110.1 ரூபாய்
  • திருநெல்வேலி – 109.86 ரூபாய்
  • திருப்பத்தூர் – 111.38 ரூபாய்
  • திருப்பூர் – 110.14 ரூபாய்
  • திருவள்ளூர் – 109.51 ரூபாய்
  • திருவண்ணாமலை – 110.95 ரூபாய்
  • தூத்துக்குடி – 110.04 ரூபாய்
  • வேலூர் – 110.79 ரூபாய்
  • விழுப்புரம் – 110.94 ரூபாய்
  • விருதுநகர் – 110.25 ரூபாய்

தமிழ்நாட்டில் டீசல் விலை

தமிழ்நாட்டில் டீசல் விலை

  • அரியலூர் – 100.42 ரூபாய்
  • செங்கல்பட்டு – 99.6 ரூபாய்
  • சென்னை – 99.42 ரூபாய்
  • கோயம்புத்தூர் – 100.05 ரூபாய்
  • கடலூர் – 100.8 ரூபாய்
  • தருமபுரி – 100.64 ரூபாய்
  • திண்டுக்கல் – 100.5 ரூபாய்
  • ஈரோடு – 99.92 ரூபாய்
  • கள்ளக்குறிச்சி – 101.59 ரூபாய்
  • காஞ்சிபுரம் – 100.13 ரூபாய்
  • கன்னியாகுமரி – 100.23 ரூபாய்
  • கரூர் – 99.86 ரூபாய்
  • கிருஷ்ணகிரி – 101.18 ரூபாய்
  • மதுரை – 100.06 ரூபாய்
  • நாகப்பட்டினம் – 100.91 ரூபாய்
  • நாமக்கல் – 100.06 ரூபாய்
  • நீலகிரி – 101.43 ரூபாய்
  • பெரம்பலூர் – 100.45 ரூபாய்
  • புதுக்கோட்டை – 100.47 ரூபாய்
  • ராமநாதபுரம் – 101.03 ரூபாய்
  • ராணிப்பேட்டை – 100.37 ரூபாய்
  • சேலம் – 100.69 ரூபாய்
  • சிவகங்கை – 100.28 ரூபாய்
  • தேனி – 100.81 ரூபாய்
  • தென்காசி – 100.03 ரூபாய்
  • தஞ்சாவூர் – 100.2 ரூபாய்
  • திருவாரூர் – 100.52 ரூபாய்
  • திருச்சிராப்பள்ளி – 100.2 ரூபாய்
  • திருநெல்வேலி – 99.98 ரூபாய்
  • திருப்பத்தூர் – 101.41 ரூபாய்
  • திருப்பூர் – 100.22 ரூபாய்
  • திருவள்ளூர் – 99.58 ரூபாய்
  • திருவண்ணாமலை – 100.99 ரூபாய்
  • தூத்துக்குடி – 100.16 ரூபாய்
  • வேலூர் – 100.83 ரூபாய்
  • விழுப்புரம் – 100.98 ரூபாய்
  • விருதுநகர் – 100.36 ரூபாய்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Petrol diesel price hiked for the 12th time to 8.40 rupees per liter today

India oil refinery and retail selling companies hiked Petrol diesel prices for the 12th time from March 22 to 8.40 rupees per liter until today. on March 4 petrol and diesel prices hiked 40 paise per liter. பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.8.40 உயர்வு.. 12வது முறை விலை உயர்வு..!

Story first published: Monday, April 4, 2022, 10:09 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.