வீடு தேடி வரும் அஞ்சலக சேவை.. எப்படி பெறுவது.. யாரெல்லாம் பெறலாம்..!

இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி சேவையினை வீட்டு வாசலிலேயே பெறும் வசதியை வங்கிகளை போலவே வழங்குகிறது.

இதனை எப்படி பயன்படுத்துவது? யாரெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம்? இதற்காக எப்படி புக் செய்வது அல்லது அழைப்பு விடுப்பது? எதெற்கெல்லாம் கிடைக்கும் இந்த சேவை? இதற்கு கட்டணங்கள் ஏதும் உண்டா?

கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

அள்ளிக் கொடுத்த RIL, ஹெச்டிஎஃப்சி வங்கி.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ.2.61 லட்சம் கோடி அதிகரிப்பு!

ஆர்வம் அதிகரிப்பு

ஆர்வம் அதிகரிப்பு

கொரோனாவின் வருகைக்கு பிறகு அஞ்சலக திட்டங்கள், அஞ்சலக வங்கி கணக்குகள் என பலவற்றிலும், பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக அஞ்சல் சேமிப்பில் நல்ல வட்டி கிடைப்பதும் வங்கியைக் காட்டிலும் வட்டி அதிகம் என்பதும் ஒரு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. மேலும் அஞ்சலக பேமெண்ட் வங்கியும் வங்கியினை போல அனைத்து சேவைகளையும் வழங்கி வருகின்றது.

என்னென்ன சேவைகள்

என்னென்ன சேவைகள்

இந்த டோர் ஸ்டெப் சேவை மூலம் அஞ்சலக ஊழியர்கள் உங்கள் வீட்டிற்கு வருவார்கள்.

  • நீங்கள் வங்கிக் கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம்
  • பணம் டெபாசிட் மற்றும் பணத்தை எடுக்கலாம்.
  • பணம் டிரான்ஸ்பர் செய்து கொள்ளலாம்
  • ரீசார்ஜ் செய்யலாம் மற்றும் பயன்பாட்டு பில்கள் செலுத்தலாம்

 

என்னென்ன அப்டேட் செய்யலாம்?
 

என்னென்ன அப்டேட் செய்யலாம்?

உங்களது கணக்கில் ஏதேனும் அப்டேட் செய்ய வேண்டுமெனில் செய்து கொள்ளலாம். உதாரணத்திற்கு பான் அப்டேட், மொபைல் நம்பர் அப்டேட், ஸ்டேட்மெண்ட் என பல சேவைகளையும் பெறலாம்.

பணம் எடுப்பதோடு மட்டும் அல்ல, பேலன்ஸ் தெரிந்து கொள்ளுதல், மினி ஸ்டேட்மெண்ட், ஆதார் அடிப்படையிலான பேமெண்ட் சேவை உள்ளிட்ட சேவைகளையும் பெறலாம்.

லைஃப் இன்சூரன்ஸ், ஜெனரல் இன்சூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட்ஸ், மூன்றாம் நபர் பரிவர்த்தனை என அனைத்து சேவைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

இதோடி டிஜிட்டல் லைஃப் சர்டிபிகேட், அஞ்சலக திட்டங்களான பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா, தொடர்வைப்பு நிதி, உள்ளிட்ட திட்டங்களுக்கு பணம் செலுத்திக் கொள்ளலாம்.

பிற வங்கிகளுடன் வைத்திருக்கும் உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட கணக்குகளையும் அணுகலாம்.

 

வீட்டு வாசலில் பணம் பெறுவது எப்படி?

வீட்டு வாசலில் பணம் பெறுவது எப்படி?

முதலில் நீங்கள் 155299 என்ற எண் மூலம் தொடர்பு மையத்தை அழைத்து பதிவு செய்ய வேண்டும். பின்பு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு மெசேஜ் வரும். ஓடிபியினை சரியாக கொடுத்து அப்டேட் செய்தால் பதிவு உறுதியாகி விடும்.

இதனை ஆன்லைனிலும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியின், ஊழியர்களுக்கு வருகை விவரங்களை உறுதிப்படுத்த வேண்டும். எனினும் தற்போது இந்த தளம் https://ccc.cept.gov.in/ServiceRequest/ ( page under maintenance) என உள்ளது.

 

கட்டணம்

கட்டணம்

வாடிக்கையாளர்கள் அஞ்சலகத்தில் இருந்து 1 கிலோமீட்டத்திற்குள் இருக்கிறார்கள் எனில் 20 ரூபாய் _ ஜிஎஸ்டியும் கட்டணமாக வசூலிக்கப்படும்.

இந்த சேவையினை காலை 11 மணியில் இருந்து மாலை 4 மணி வரையில் பெற்றுக் கொள்ளலாம். இந்த சேவையினை வாடிக்கையாளர்கள் யார் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். புதியதாக கணக்கு தொடங்க வேண்டும் என்றாலும் கூட, தொடங்கிக் கொள்ளலாம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

how to book doorstep banking services in IPPB? check details

how to book doorstep banking services in IPPB? check details/வீடு தேடி வரும் அஞ்சலக சேவை.. எப்படி பெறுவது.. யாரெல்லாம் பெறலாம்..!

Story first published: Monday, April 4, 2022, 8:35 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.