ஐபிஎல் இறுதிப்போட்டி எங்கு நடைபெற உள்ளது தெரியுமா? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

ஐபிஎல் போட்டியின் 15வது சீசன் கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படு மோசமாக விளையாடி வருகிறது. சிஎஸ்கே அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து புள்ளிப் பட்டியலின் பின் தங்கியுள்ளது. மும்பை அணிக்கும் இதே நிலை தான். 5 முறை கோப்பையை வென்ற மும்பை அணி இந்த சீசனில் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. மும்பை, சிஎஸ்கே அணிகளை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ஐபிஎல் இறுதிப்போட்டி எங்கு நடைபெறும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | RCB vs Virat Kohli: ரொனால்டோவின் மூளையை ஸ்கேன் செய்ய ஆசைப்படும் விராட் கோலி

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் நடைபெறாத ஐபிஎல் போட்டிகளில் இந்த முறை இந்தியாவில் நடைபெற்று வருகிறது. மும்பை, புனே ஆகிய இரண்டு நகரங்களில் மட்டுமே சிறப்பாக ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. லீக் சுற்றுப் போட்டிகளுக்கள் மட்டுமே எங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிளே ஆப் போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி எங்கு நடைபெறும் என்று அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இறுதிப்போட்டி எங்கு நடைபெறும் என்ற உறுதியான தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி லீக் சுற்றுப்போட்டிகள் அனைத்தும் மும்பை மற்றும் புனேவில் நடைபெற உள்ளன. 

google

மேலும் படிக்க | இந்த வீரர்களுக்கு இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம்!

அதனைத்தொடர்ந்து எலிமினேட்டர் போட்டியும், குவாலிபயர் போட்டியும் லக்னோவில் உள்ள ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெறும். இரண்டாவது எலிமினேட்டர் போட்டி மற்றும் இறுதிப்போட்டி ஆகியவை அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானமான மோதிரா மைதானத்தில் நடைபெறும். ஐபிஎல் போட்டியில் இந்த முறை புதிதாக லக்னோவும், குஜராத்தும் இணைந்துள்ளது. இதனையடுத்து லக்னோ மற்றும் குஜராத் ரசிகர்களை கவரும் வகையில் பிளே ஆப் போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி அந்த நகரங்களில் நடைபெற உள்ளது. 

இந்த முறை யார் கோப்பை வெல்வார் என்ற எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது. புதிதாக இணைந்துள்ள இரு அணிகள் கோப்பையை வெல்லுமா அல்லது பழைய அணிகளில் ஒன்றே கோப்பையை வெல்லுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.