எல்லாம் நல்லதாக நடக்கும்; ரம்ஜான் சிந்தனைகள்| Dinamalar

ஸெய்யதுனா தாவூத் என்பவர் கவசம் விற்பனை செய்யும் வியாபாரி. வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தை தரும்படி அவரது மனைவி கேட்க, தாவூத்தும் சம்மதித்தார். ஆனால் அன்று யாரும் கவசம் வாங்க வரவில்லை. பணத்தை எதிர்பார்த்து காத்திருந்த மனைவிக்கு ஏமாற்றம் ஏற்பட்டது.
“இதெல்லாம் ஒரு பிரச்னையா? நாளை பணம் தருகிறேன்” என்றார் தாவூத். மறுநாளும் இதே நிலை நீடித்தது. கவசம் விற்கவில்லை. வருந்திய அவர்,“இது என்ன சோதனை? தவறு ஏதும் செய்யவில்லையே” என இறைவனை பிரார்த்தித்தார்.
”திறமைசாலி என உங்களை நீங்களே நினைத்துக் கொண்டு, விற்று வருவதாக சொன்னீர்கள். இன்ஷா அல்லாஹ் (இறைவனின் விருப்பமிருந்தால்) என்று சொல்லவில்லை. எனவே தான் கவசம் விற்கவில்லை” என இறைவனிடம் இருந்து பதில் கிடைத்தது. ‘இறைவனின் விருப்பப்படி நடக்கட்டும்’ என்று யார் செயல்படுகிறாரோ அவருக்கே எல்லாம் நல்லதாக நடக்கும்.
https://www.dinamalar.com/ramjan-special.asp

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:35 மணி.

நாளை நோன்பு வைக்கும் நேரம்:அதிகாலை 4:40 மணி.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.