குழந்தையின் முதுகில் முகவரியை எழுதும் உக்ரைன் தாய்மார்கள்..! இதயங்களை உடைக்கும் சோகம்….!

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா  தொடுத்துள்ள போர் தொடர்ந்து வரும் நிலையில், அங்குள்ள தாய் ஒருவர் தனது குழந்தையின் முதுகில், தங்களது முகவரியை எழுதியுள்ள காட்சி தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது. நெஞ்சை உடைக்கும் இந்த புகைப்படம், காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

நேட்டோ விவகாரம் காரணமாக, உக்ரைன் மீது பிப்ரவரி 24ந்தேதி அன்று போர் தாக்குதலை தொடங்கிய ரஷ்யா தொடர்ந்து 40 நாட்களை கடந்தும், தனது தாக்குதலை நிறுத்தாமல் தொடர்கிறது. பல மாநிலங்களை குண்டு மழை பொழிந்து இடித்து தள்ளி சுடுகாடாக மாற்ற வரும் ரிஷ்ய படைகள் தற்போது உக்ரைனின் கிழக்கு பகுதியில் தாக்குதலை நடத்தி வருகிறது.

இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களில், ஏராளமான பொதுமக்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் கூறி வருகிறது. இதை அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது. அது தொடர்பான புகைப்படங்களும் வைலாகின. ஆனால், அதை ரஷ்யா ஏற்க மறுத்து வருகிறது. உக்ரைனில் இருந்து குழந்தைகள் தப்பிச் செல்ல முயற்சிக்கும்போது ரஷ்யப் படைகளால் அவர்கள் “மனிதக் கேடயங்களாக” பயன்படுத்தப்படுவதாகவும் புகார் எழுந்தது. உக்ரைன் தலைநகர் கிவ்வுக்கு வெளியே புச்சாவில் ஒரே இடத்தில் அதிகளவு மக்கள் புதைக்கப்பட்ட குழி மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால், ரஷ்ய வெளியுறவுத்துறையோ, ரஷ்யாவை களங்கப்படுத்த உக்ரைனால் கல்லறைகள் மற்றும் சடலங்கள் போலியாக உருவாக்கப்பட்டதாக கூறியுள்ளது.

இந்த சோகமயமான சூழலில், போர் காரணமாக தாங்கள் இறந்துவிட்டால், தங்களது குழந்தைகள்  அடையாளம் காணவேண்டும் என்பதற்காக தங்களது முகவரிகளை குழந்தைகளின் உடலில் எழுதும் சோகம் நடைபெற்றுள்ளது.  ரஷ்யப் படைகளால் தாங்கள் கொல்லப்படுவோம் என்று அஞ்சும் உக்ரைன் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் உடல்களில் குடும்ப விவரங்களை எழுதத் தொடங்கியுள்ளனர்.

உக்ரைனில் உள்ள ஒரு  சிறுமியின் முதுகில், அந்த குழந்தையின் தாயார், தங்களது பெயர் மற்றும் தொலைபேசி எண்ணுடன்  குடும்ப விபரங்களை எழுதியுள்ள புகைப்படம் வெளியாகி உள்ளது.  இந்த புகைப்படத்தை காண்பவர்களின் நெஞ்சம் பதைபதைப்பதுடன், கண்களில் கண்ணீரும் கொட்டுகிறது. இந்த சோகமயமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக, உக்ரைனில் அப்பாவி மக்கள், குழந்தைகள் பாதிக்கப்படும் சோகம் இந்த குழந்தைகள் மூலம் உலக நாடுகளுக்கு தெரிய வந்துள்ளது.

உக்ரேனிய கலைஞரும் தாயுமான சாஷா மகோவி, தனது மகளின் முதுகில் மை இடப்பட்ட படத்தையும், பெயர்கள் மற்றும் முகவரிகளுடன் தனது பேக்கில் உள்ள தொடர்புகளின் குறிப்புகளையும் பகிர்ந்துள்ளார். இந்த படத்தை உக்ரேனிய பத்திரிகையாளர் அனஸ்தாசியா லாபடினா தனது சமூக ஊடக ஊட்டத்தில் மறுபகிர்வு செய்தார், மேலும் இது ஒரு தனிமையான சம்பவம் அல்ல என்பதை வெளிப்படுத்தினார்.

Lapatina என்ற பத்திரிக்கையாளர் Kyiv Independent உடன் இணைந்து உக்ரைனை மூழ்கடித்துள்ள போர் மற்றும் மரணம் குறித்து அறிக்கை செய்து வருகிறார், பிப்ரவரி 24 அன்று விளாடிமிர் புடின் தலைமையிலான ரஷ்யா அந்நாட்டின் மீது படையெடுத்த நாள். குடும்பத் தொடர்புகளின் பெயர் மற்றும் முகவரியைக் குறிப்பிட்டு நீல நிற மையினால் மூடப்பட்ட ஒரு சிறுமியின் முதுகின் படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.