கூகுள் குட்டப்பன் படத்தின் மூன்றாவது பாடலை வெளியடப்போகும் பிரபல இயக்குனர்…!

கே.எஸ்.ரவிகுமாரின் ‘
கூகுள் குட்டப்பா
’ படத்தின் முக்கிய அப்டேட் ஆர்.ஆர்.ஆர் படத்தின் இயக்குனர் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பிரபல இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’.

மலையாளத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘
ஆன்ட்ராய்டு குஞ்சப்பன்
வெர்ஷன் 5.25’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.பிக்பாஸ் பிரபலங்கள்
தர்ஷன்
மற்றும்
லாஸ்லியா
ஆகிய இருவரும் இணைந்து இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பிரபல நடிகையுடன் காதல்: ‘டாக்டர்’ பட வில்லனுக்கு விரைவில் டும் டும் டும்..!

காமெடி கலாட்டாவில் உருவாகியுள்ள இப்படத்தில் யோகிபாபு, மனோபோலா, மாரியப்பன், ப்ராங் ஸ்டார்
ராகுல்
உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குனர்களாக இருந்த சபரி மற்றும் சரவணன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.

இந்நிலையில் ஏற்கனவே இப்படத்தில்
ஜிப்ரான்
இசையில் உருவாகியுள்ள இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் மூன்றாவது
பாடல்
குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் மூன்றாவது பாடலை வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு ஆர்.ஆர்.ஆர் படத்தின் இயக்குனர்
ராஜமௌலி
வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜமௌலி இந்த பாடலை வெளியிடுவது ரசிகர்களிடையே முக்கியத்துவம் பெறுகிறது.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

அடுத்த செய்திபீஸ்ட் படத்திற்கு தடை? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.