சென்னையில் திமுக பிரமுகர் படுகொலை; அதிமுக உறுப்பினர் உட்பட 5 பேர் நீதிமன்றத்தில் சரண்

ADMK member and 4 others surrendered on Chennai DMK member murder case: சென்னையில் திமுக பிரமுகர் சௌந்தரராஜன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட 5 பேர் செங்கல்பட்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். சௌந்தரராஜன் ஞாயிற்றுக்கிழமை பிராட்வேயில் படுகொலை செய்யப்பட்டார்.

சென்னை வியாசர்பாடியில் திமுக 59-வது வட்ட கழக செயலாளராக இருந்தவர் சௌந்தரராஜன். இவர்,சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் சௌந்தரராஜன் நேற்று வெட்டிகொலை செய்யப்பட்டார்.

பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலுக்கு சௌந்தரராஜன் தண்ணீர் கொண்டு வந்தபோது அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்தது. இதனைத் தொடர்ந்து, பேருந்து நிலையத்தில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக எஸ்பிளனேடு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதனடிப்படையில் பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது கொலையாளிகள் ஆட்டோவில் தப்பி சென்ற காட்சி பதிவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், திமுக பிரமுகர் சௌந்தரராஜன் கொலை வழக்கில் கார்த்திக் குமரேசன், சதீஷ், இன்பா, அதிமுக பிரமுகர் கணேசன் மற்றும் அவருடைய மகன் தினேஷ் ஆகிய 5 பேர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். மேலும் சில சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்: பள்ளிகளில் சிறப்புக் குழு; ஆசிரியர்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க அரசு நடவடிக்கை

ஐந்து பேரும் சரணடைந்தது குறித்து நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து எஸ்பிளனேடு காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழு செங்கல்பட்டு சென்றது. சரணடைந்தவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. மேலும், இந்த கொலை வழக்கு தொடர்பாக வசந்த குமார் என்பவர் கைதாகியுள்ளார்.

பிராட்வேயில் ஜூஸ் கடை நடத்தி வந்த சௌந்தரராஜன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து திமுகவுக்கு மாறினார். தாகத்தில் வாடும் மக்களுக்கு இலவச குடிநீர் வழங்குவதற்காக திமுக பதாகையின் கீழ் பந்தல் போட்டதால்தான் பிரச்சனை தொடங்கியது.

சௌந்தரராஜன் முன்பு அதிமுக பதாகையின் கீழ் பந்தல் அமைத்து மக்களுக்கு இலவச குடிநீர் வழங்கினார். சௌந்தரராஜன் இந்த முறை திமுக பேனரில் பந்தல் அமைத்தபோது அதிமுக பிரமுகர் கணேசன் எதிர்த்தார். சௌந்தரராஜன் அந்த இடத்தை அ.தி.மு.க.விடம் ஒப்படைக்க கணேசன் கேட்டுக்கொண்டார். இதுவே கொலைக்கு வழிவகுத்தது என போலீசார் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.