ஊக்குவிப்பவன் இருந்தால் ‘ஊக்கு’விற்பவனும் ’தேக்கு’ விற்பவன் ஆவான் என பிரபல திரைப்பட பாடலாசிரியர் வாலி சொல்லியிருக்கிறார். அவரின் வார்த்தைகள் தோல்வியில் முடங்கியிருப்பவர்களுக்கும், வெற்றிப் பெறுவதற்காக சரியான வழிக்காட்டல் இல்லாமல் தவிக்கும் எத்தனையோ பேர்களுக்கு உந்து சக்தியைக் கொடுக்கும் மாமருந்தாக உள்ளது. வெறும் வாக்கியமாக படிக்கும்போது இந்த வார்த்தைகளின் ஆழத்தை உணர முடியாது. இக்கட்டான சூழலில் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் விழிப்பவர்களுக்கே இந்த வார்த்தைகளின் மகிமை புரியும்.
மேலும் படிக்க | Cobra Video: பின்னி பிணையும் நாக பாம்புகள்; இது காதலா இல்லை ஊடலா
இந்த வார்த்தைகளுக்கு எடுத்துக்காட்டாக இணையத்தில் ஒரு வீடியோ வைரலாக பரவியுள்ளது. சுட்டிக் குழந்தை ஒன்றை சூழ்ந்திருக்கும் பேஸ்கட்பால் வீரர்கள், அந்த குழந்தையை கூடைப்பந்து விளையாடுமாறு உற்சாக மூட்டுகின்றனர். அந்த இளம் குழந்தையும் அவர்களின் உற்சாக ஆரவாரக் குரலில் கூடைப்பந்து போட வைக்கப்பட்டிருக்கும் வலையை நோக்கி ஓடுகிறது. அதுவரை பந்தை மாறி மாறி வீசிக் கொண்டு வந்த வீரர்கள், இப்போது குழந்தையின் கையில் பந்தைக் கொடுத்து பேஸ்கட் பால் கூடையில்போடுமாறு உற்சாகமூட்டுகின்றனர்.
OMG pic.twitter.com/S9hjUiexSt
— Just Amazing (@JustAma60151279) April 5, 2022
உற்சாகத்தில் இருக்கும் குழந்தையும் அழகாக பந்தை தூக்கிவீச, அற்புதமாக சென்று கூடைப்பந்து வலையில் பந்து விழுகிறது. ஒரே முயற்சியில் குழந்தை வீசிய பந்து கூடையில் விழுந்ததைக் கண்ட வீரர்கள் ஆரவாரம் எழுப்பி உற்சாகத்தில் குதிக்கின்றனர். ஒருவர் குழந்தையை சந்தோஷமாக தூக்கிவீசி கொஞ்சுகிறார். இந்த வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், வீரர்களின் உற்சாகமே குழந்தை சரியாக பந்தை வலையில் போட காரணமாக இருந்ததை வீடியோ பார்ப்பவர்களால் உணர முடியும். இதுவரை டிவிட்டரில் மட்டும் இந்த வீடியோ 13 ஆயிரம் பார்வைகளைப் பெற்றுள்ளது.
மேலும் படிக்க | Video: பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் தந்தை செய்த பிரம்மாண்ட செயல்