ஐபிஎல் 15ஆவது சீசன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இன்று மாலை மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ளவிருக்கிறது. புனேவில் நடைபெறவிருக்கும் இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் படிக்க | ஐபிஎல் இறுதிப்போட்டி எங்கு நடைபெற உள்ளது தெரியுமா? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!
இந்தச் சூழலில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களை வழிநடத்தும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் நேற்று புனேவுக்கு சென்றார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், சச்சின் டெண்டுல்கர் தனது நண்பருடன் ஹிந்தி பாடல் ஒன்றை பாடுகிறார். மேலும் அந்தப் பாடலுக்கு ஏற்றவாறு தனது கைகளையும் அசைக்கிறார்.
அந்த வீடியோவுக்கான கேப்ஷனில், புனேவுக்கு செல்லும்போது வாகன நெரிசலில் சிக்கிக்கொண்டேன். அந்தச் சமயத்தில் இந்த அழகான பாடலை கேட்டேன் என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிகளவு பகிர்ந்துவருகின்றனர்.
மேலும் படிக்க | தோனிதான் அணியை வழிநடத்துகிறாரா? ஜடேஜாவின் பதில்!