'ஓ.டி.டியில் எல்லையில் கடந்து எழுத முடியும்' – இயக்குனர் வெற்றிமாறன்

ஓ.டி.டி வருகை எழுத்தாளர்களுக்கு Golden Era என தேசிய விருது வென்ற இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.

Zee5 OTT தளம் பிரகாஷ் ராஜ் நடித்துள்ள அனந்தம், வசந்தபாலன் இயக்கியுள்ள தலைமைச் செயலகம், ஏ.எல் விஜயின் Five Six Seven Eight, கிருத்திகா உதயநிதியின் Paper Rocket,  ராதிகா நடித்துள்ள கார்மேகன் உள்ளிட்ட 10 இணையத் தொடர்களை வெளியிடுகிறது. அதில் தேசிய விருது வென்ற வெற்றிமாறன் ‘நிலமெல்லாம் ரத்தம்’ என்ற தொடருக்கு கதை எழுதியுள்ளார். அமீர் நடித்துள்ள அந்த தொடரை ரமேஷ் என்பர் இயக்கியுள்ளார்.

image

நிலமெல்லாம் ரத்தம் தொடரை அறிமுகம் செய்து வைத்து பேசிய வெற்றிமாறன், ஓ.டி.டி வருகை எழுத்தாளர்களுக்கு Golden Era காலமாக உள்ளது. இணைய தொடர்கள் திரைக்கதை எழுதுபவர்களுக்கு  திரைப்படங்களை காட்டிலும் ஏற்றதாக உள்ளது. திரைப்படங்களுக்கு அதிகபட்சம் 200 பக்கங்கள்தான் கதை எழுத முடியும். ஆனால் இணையத் தொடர்களுக்கு நிறைய எழுதலாம். படங்களை பொருத்தவரை திரையரங்கு வெளியீட்டை மனதில் வைத்தே எடுத்து வருகிறோம். அந்த Limitation-களை கடந்து பேசுவதற்கு இணையத் தொடர்கள் உதவியாக இருக்கிறது.

இதையும் படிக்க: இன்ஸ்டா க்வீன்; தளபதி ஹீரோயின்… இது ‘தி ரைஸ் ஆஃப் ராஷ்மிகா’! #HBDRashmika

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.