தமிழ், தெலுங்கினை அதிகம் விரும்பும் மக்கள்.. ZEE5 எடுத்த சூப்பர் முடிவு.. 2022ல் களைகட்ட போகுது!

ZEE5 நிறுவனம் அதன் தமிழ் மற்றும் தெலுங்கு பிரிவுக்கு அதன் முதலீட்டில் கிட்டதட்ட மூன்று மடங்கு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜீ-பைவ்வின் சந்தாரர்கள் தலா 20% பங்களிக்கும் தமிழ் மற்றும் தெலுங்கு பிரிவுகளை மேம்படுத்த, கிட்டதட்ட அதன் முதலீடுகளை மூன்று மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அதன் தலைமை வணிக அதிகாரி மணிஷ் கல்ரா தெரிவித்துள்ளார்.

ஓடிடி பயனர்களின் விகிதமானது சிறு நகரங்களிலும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், நிறுவனம் பிராந்திய மொழிகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.

தட்டி தூக்கிய டிசிஎஸ்.. அமெரிக்காவில் ஒன்னு, கனடாவில் ஒன்னு.. வியப்பில் இன்போசிஸ்..!

தமிழ் & தெலுங்கு தான் டாப்

தமிழ் & தெலுங்கு தான் டாப்

ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அதன் ஓடிடி தளத்தில் அதன் அனைத்து நெட்வொர்க் சம்பந்தமானவற்றையும் பட்டியலிடுகிறது. இதில் ஒட்டுமொத்த பார்வையளார்களில் பெரும்பகுதி, அதன் பிராந்திய மொழிகளில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளது.. இதில் தமிழ் மற்றும் தெலுங்கில் தலா 20% பங்கு வகிப்பதாக தெரிவித்துள்ளது. இதே 10% ஹிந்தி அல்லாத மொழிகளில் இருந்தும் வருவதாக கல்ரா தெரிவித்துள்ளார்.

தமிழில் பல திட்டம்

தமிழில் பல திட்டம்

குறிப்பாக 2022ல் தமிழில் 10 அசல் தொடர் உள்பட பல, தொடர்களை திட்டமிட்டுள்ளதாகவும் கல்ரா தெரிவித்துள்ளார்.

இதே ZEE5-ன் தலைவர் புனித் மிஸ்ரா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூட, ஜீ-பைவ்வுக்கு ஹிந்தி அல்லாத பார்வையாளர்கள் எண்ணிக்கை மிக குறைந்ததாக இருந்தது என கூறியுள்ளார். ஆனால் தற்போது நல்ல வரவேற்புள்ள நிலையில் நிறுவனம் முதலீட்டினை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

பட்டையை கிளப்பும் தமிழ் & தெலுங்கு
 

பட்டையை கிளப்பும் தமிழ் & தெலுங்கு

பணம் செலுத்தும் சந்தா அடிப்படையில் பார்த்தால், நாட்டின் பிற்பகுதியில் 100% வளர்ச்சி கண்டு வருகின்றது எனில், தமிழ் மற்றும் தெலுங்கில் 150% வளர்ச்சி கண்டு வருகின்றது. இது ஹிந்தியை விட வேகமாக வளர்ந்து கொண்டுள்ளது. வாடிக்கையாளார்கள் தமிழ் மற்றும் தெலுங்கில் ஆர்வம் காட்டுவது நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது. அவர்கள் zee5 குழுவில் சேர தயாராக உள்ளனர். இது பெரும் நம்பிக்கையை கொடுகின்றது.

மொத்த பயனர்கள்

மொத்த பயனர்கள்

zee5 மார்ச் நிலவரப்படி, தினசரி 6.1 மில்லியன் ஆக்டிவ் யூசர்களை கொண்டுள்ளது. இதே ஆகஸ்ட் 2021 நிலவரப்படி 6.5 மில்லியனாக அதிகரித்துள்ளதாக மீடியா கன்சல்டன்ஸி நிறுவனமான ORMAX மதிப்பிட்டுள்ளது.

டிஸ்னி + ஹாட்ஸ்டார் 34.5 மில்லியன் சந்தாரர்களையும், அமேசான் பிரைம் 19.7 மில்லியன் வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ள நிலையில், ஜீ5 மூன்றாவது இடத்தில் உள்ளது.

பயன்பாடு அதிகரிக்கும்

பயன்பாடு அதிகரிக்கும்

இந்தியாவில் பற்பல மொழிகள் இருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கு அதிகம் விரும்பப்படுகின்றது. ஆக இங்கு 2X 3X மடங்கு முதலீடுகளை திட்டமிட்டுள்ளோம். இங்கு அசல் தொடர்களை பல உருவாக்கியுள்ளோம். மற்ற ஒடிடி தளங்களில் அப்படியில்லை என கல்ரா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஓடிடி பயன்பாடு தற்போது 16% என்ற விகிதத்தில் உள்ளது. இது அடுத்த 3- 4 வருடத்தில் 30 – 35% ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என கல்ரா தெரிவித்துள்ளார்.

இன்றைய பங்கு விலை நிலவரம்?

இன்றைய பங்கு விலை நிலவரம்?

ZEE5ன் இத்தகைய அறிவிப்புகளுக்கு மத்தியில் இன்று ஜீ எண்டர்டெயின்மெண்ட் எண்டர்பிரைசஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் பங்கு விலையானது, 2.05% குறைந்து, 294 ரூபாயாக என்.எஸ்.யில் வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 305 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 293.05 ரூபாயாகும்.

இதே பி.எஸ்.இ-யில் பங்கு விலையானது, 2.00% குறைந்து, 294.05 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 304.95 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 293.20 ரூபாயாகும்.இதன் 52 வார உச்ச விலை 378.60 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 166.80 ரூபாயாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

ZEE5 plans to higher investment in tamil, telugu content in current year

ZEE5 plans to higher investment in tamil, telugu content in current year/தமிழ், தெலுங்கினை அதிகம் விரும்பும் மக்கள்.. ZEE5 எடுத்த சூப்பர் முடிவு.. 2022ல் களைகட்ட போகுது!

Story first published: Wednesday, April 6, 2022, 14:18 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.