`ராமன் தேடிய சீதை’ நாயகி விமலா ராமனை கரம்பிடிக்கிறார் நடிகர் வினய்?

நடிகர் வினய், நடிகை விமலா ராமனை விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் `உன்னாலே உன்னாலே’ படத்தில் ஹீரோவாக நடித்த வினய் என்றென்றும் புன்னகை, மோதி விளையாடு, துப்பறிவாளன், டாக்டர், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர், ‘பொய்’ படம் மூலம் அறிமுகமான நடிகை விமலா ராமனை காதலித்து வந்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. விமலா ராமன் தமிழில் ராமன் தேடிய சீதை, இருட்டு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

image

இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அதை உறுதிசெய்யும் வகையில் இருவரும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by Vinay Rai (@vinayrai79)

இவர்களின் திருமணம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்தி: `விஜய் 66’ படப்பிடிப்பு தொடங்கியது – ட்ரெண்டாகும் பூஜை ஃபோட்டோஸ்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.