ரியல்மி சி31 விற்பனை – ரூ.1000 தள்ளுபடி… விலை இவ்வளவு தான்!

இந்திய ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஏற்ற வகையில் குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ரியல்மி நிறுவனம் புதிய மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போனை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது.

பிரபல நிறுவனமான Realme தனது மலிவு விலை ஸ்மார்ட்போனான Realme C31-ஐ முதலில் இந்தோனேசியா நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. 4ஜி இணைப்பு வசதி கொண்ட இந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் தற்போது இந்திய டெக் சந்தையில் விற்பனைக்காக வெளியிடப்பட்டுள்ளது.

விற்பனைக்கு வந்த போக்கோ சூப்பர் போன் – விலை மற்றும் அம்சங்கள்!

ரியல்மி சி31 அம்சங்கள் (Realme C31 Specifications)

Android 11
அடிப்படையிலான Realme UI R ஸ்கின் இந்த போனை இயக்குகிறது. புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் 6.5″ இன்ச் 60Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட HD+ LCD டிஸ்ப்ளே உள்ளது. இது 480 nits வரை பிரைட்னஸை ஆதரிக்கிறது. இந்த திரையின் அடர்த்தி 269PPI ஆக உள்ளது.

இதில் 3GB, 4GB LPDDR4X ரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டோரேஜ் மெமரியாக UFS 2.1 32GB, 64GB ஆகிய இரு விருப்பத் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்ட் உதவியுடன் 1TB வரை மெமரியை விரிவுபடுத்தலாம். இந்த ஸ்மார்ட்போன்
Unisoc T612
processor சிப்செட் கொண்டு இயக்கப்படுகிறது.

மலிவு விலை ரியல்மி ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் டிரிப்பிள் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில், 13MP f/2.2 5P lens, 2MP மேக்ரோ கேமரா, 2MP மோனோகுரோம் சென்சார் ஆகியவை நிறுவப்பட்டுள்ளது. செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 5MP f/2.4 3P lens வழங்கப்பட்டுள்ளது.

அக்செலெரோமீட்டர், கிராவிட்டி சென்சார், ஜியோமேக்னெடிக் சென்சார், லைட் சென்சார், புராஸிமிட்டி ஆகிய சென்சார்கள் இந்த மலிவு விலை ரியல்மி ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ளது.

ரியல்மி சி31 விலை மற்றும் சலுகைகள் (Realme C31 Price and Offers)

வைஃபை, ப்ளூடூத் 5.0, SBC, AAC, aptX, LDAC ஆடியோ கோடெக், MicroUSB, 3.5mm ஹெட்போன் ஜாக் ஆகிய இணைப்பு ஆதரவும் ரியல்மி சி31 ஸ்மார்ட்போனில் உள்ளது. GPS, AGPS, BeiDou Navigation Satellite System, GLONASS, Galileo போன்ற இருப்பிட சென்சார்களும் இதில் நிறுவப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 5000mAh பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனுடன் சார்ஜர் கொடுக்கப்படுகிறது. டார்க் கிரீன், லைட் சில்வர் ஆகிய இரு வண்ணத் தேர்வுகளில் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள ரியல்மி சி31 ஸ்மார்ட்போனின் 3GB + 32GB வேரியண்டின் விலை ரூ.8,999 ஆகவும், 4GB + 64GB வேரியண்டின் விலை ரூ.9,999 ஆகவும் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

நம்ம ஊரு டாடாவின் புதிய ‘Neu’ சூப்பர் ஆப் – அனைத்து சேவைகளும் விரல் நுனியில்!

இந்த ஸ்மார்ட்போன் Realme, Flipkart ஆகிய தளங்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1000 எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மீது நேரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. எச்டிஎஃப்சி வங்கி கடன் அட்டைகள் மற்றும் டெபிட் கார்டுகள் மீதும் ரூ.1000 நேரடி தள்ளுபடி கிடைக்கிறது. பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 5% விழுக்காடு கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

அடுத்த செய்தியூடியூப் சேனல்களை முடக்கிய ஒன்றிய அரசு! என்ன காரணம்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.