தேர்தலுக்கு தயாராகிறது குஜராத்தில் காங்கிரஸ் 1200 கிமீ யாத்திரை

அகமதாபாத்: குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் நடக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரத்தை பிரதமர் மோடி ஏற்கனவே தொடங்கி விட்டார். இந்நிலையில், தனது பிரசாரத்தை தொடங்கும் வகையில், காந்தி ஆசிரமத்தில் இருந்து 1,200 கிமீ நடை பயணத்தை காங்கிரஸ் நேற்று துவக்கியது. இதை மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ரகு சர்மா கொடியசைத்து துவக்கி வைத்தார். கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் உத்தரவின் பேரில் யாத்திரை நடத்தப்படுகிறது. மொத்தம் ஆயிரத்து 200 கிமீ துாரம் நடந்து செல்லும் தொண்டர்கள், ராஜஸ்தான், அரியானா உள்ளிட்ட 4  மாநிலங்கள் வழியாக வரும் ஜூன் 1ம் தேதி டெல்லி அடைய உள்ளனர். குஜராத் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சுதந்திர போராட்டம் மற்றும் சுதந்திரத்துக்கு பிறகு 60 ஆண்டுகளில் ஏற்பட்ட நாட்டின் வளர்ச்சியில் காங்கிரஸ் ஆற்றிய பங்கு பற்றி மக்களுக்கு விளக்கும் வகையில் பல்வேறு இடங்களில் புகைப்பட கண்காட்சி நடத்தப்படும். கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.