“உலகிலேயே சிறந்த முதல்வர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்தான்”- அமைச்சர் பொன்முடி

“தமிழ்நாட்டில் உயர் கல்வி வளர்ச்சி என்றாலே, அது கருணாநிதி ஆட்சி தான்” என சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புகழாரம் சூட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று உயர் கல்வித்துறை மானிய கோரிக்கையில் பதிலளித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “தமிழ்நாட்டில் உயர் கல்வியில் வளர்ச்சி என்றாலே அது கருணாநிதியின் ஆட்சி காலத்தில் தான். தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் சதவீதம் 51 என்பது 2019ல் எடுக்கப்பட்ட கணக்கீடு. தற்போது அதை மீண்டும் கணக்கெடுத்தால் 55 சதவீதத்திற்கு மேல் உயர்ந்திருக்கும்.
image
கடந்த ஆட்சியில் 7.5% இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டாலும், ஒப்புதல் அளிக்காத ஆளுனருக்கு எதிராக போராடி அழுத்தம் கொடுத்து அதை நிறைவேற்ற காரணமானது திமுக தான். அதன் நீட்சியாக தற்போது பொறியியல், சட்டம், மீன்வளம், கால்நடை உள்ளிட்ட தொழில் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு மட்டுமல்லாது அவர்களுக்கான கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், போக்குவரத்து கட்டணம் என அனைத்தையும் இலவசமாக வழங்கி அரசு பள்ளி மாணவர்கள் கல்விக் கனவை நிறைவேற்றி வரும்வகையில், உலகத்திலேயே சிறந்த முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் தான்.
உயர்கல்வி படிக்கும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 கொடுப்பதன் மூலம், இனி அனைத்து மாணவிகளும் உயர் கல்வி கட்டாயம் படிக்கவேண்டிய சூழலை உருவாகும். இதன்மூலம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்வதோடு மட்டுமல்லாது, கல்வியின் தரத்தையும் உயர்த்துவது தான் முதலமைச்சரின் தொலைநோக்குத் திட்டம்” என தெரிவித்தார்.
சமீபத்திய செய்தி: வாக்குவாதம்.. தள்ளுமுள்ளு.. அதிமுகவினர் வெளிநடப்பு – கோவை மாமன்றக் கூட்டத்தில் பரபரப்புSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.