திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கேஜிஎஃப் பட நாயகன் யாஷ் சாமி தரிசனம்

கேஜிஎஃப் திரைப்பட கதாநாயகனும், கன்னட நடிகருமான யாஷ் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

ரங்க நாயக்கர் மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் அவருக்கு தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கோவிலுக்கு வெளியே அவரை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த யாஷ், கடந்த முறை வந்த போது ஏழுமலையானை தரிசிக்காமல் சென்று விட்டதாகவும், எனினும் தற்போது கே.ஜி.எஃப் 2 வெளியாவதற்கு முன்பாக திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளித்ததாகவும் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.