லாபத்தினை அள்ளிய ராகேஷ் ஜுன்ஜுன்வாலா.. 2 வருடத்தில் 150% லாபம்.. நீங்க?

இந்தியாவின் பிரபல பங்கு சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்களில் பிரபலமானவர். இவர் ஒரு பங்கினை விற்றாலும், வாங்கினாலும் அது கவனிக்க வேண்டிய பங்குகளில் ஒன்றாக இருந்து வருகின்றது.

அந்த வகையில் கடந்த மார்ச் காலாண்டில் டிராக்டர் விற்பனையில் முன்னணியில் இருக்கும் எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தின் பங்கினை விற்பனை செய்துள்ளார் என்பது கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது.

இன்று காலை நேர நிலவரப்படி கூட இப்பங்கின் விலையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்பட்டது. அதே நேரம் மும்பை பங்கு சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேலாக சரிவில் காணப்பட்டது.

சீரிஸ் 1 :பங்கு சந்தை என்றால் என்ன.. இது எப்படி வேலை செய்கிறது.. தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

முக்கிய பங்குதாரர் இல்லை

முக்கிய பங்குதாரர் இல்லை

மார்ச் 31, 2022வுடன் முடிவடைந்த காலாண்டில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் பெயர் முக்கிய பங்குதாரர்கள் பெயரில் இல்லை என்ற தரவுகள் காட்டுகின்றன. இது கடந்த டிசம்பர் 31 நிலவரப்படி இப்பங்கில் 5.22% பங்குகள் இருந்தது. இதே பிப்ரவரி 18, 2022 நிலவரப்படி கூட 5.68% அல்லது 75 லட்சம் பங்குகளை வைத்திருந்தார்.

தொடர் ஏற்றம்

தொடர் ஏற்றம்

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்குகள் 150 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளன. 2000ம் ஆண்டில் 642.50 ரூபாயாக இருந்த இப்பங்கின் விலையானது, ஏப்ரல் 8 நிலவரப்படி 1609.65 ரூபாயாக அதிகரித்துள்ளது. மார்ச் 31, 2020 நிலவரப்படி இப்பங்கில் 7% பங்கினை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சரிந்த விற்பனை
 

சரிந்த விற்பனை

கடந்த 2021 – 2022ம் ஆண்டில் இந்த நிறுவனம் உள்நாட்டு சந்தையில் 87,043 யூனிட்களை விற்பனை செய்திருந்தது. இது முந்தைய ஆண்டில் 1,01,848 யூனிட்களாக இருந்தது. ஆக முந்தைய ஆண்டினை காட்டிலும் கடந்த ஆண்டில் 14.50 சதவீதம் விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளது. மறுபுறம் நிறுவனத்தின் ஏற்றுமதி விகிதமானது கடந்த ஆண்டினை காட்டிலும் 46.80% அதிகரித்து 2022ம் நிதியாண்டில் 7185 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. ஏற்றுமதி விகிதம் அதிகரித்து இருந்தாலும், அது உள்நாட்டு சந்தை மதிப்பினை விட மிகச் சிறியது.

எதிர்காலம் எப்படி?

எதிர்காலம் எப்படி?

2024ம் நிதியாண்டில் எஸ்கார்ட்ஸ்-க்கு ஒரு நிலையற்ற ஆண்டாக இருக்கும். இது பொதுத்தேர்தல், மாசு உமிழ்வு விதிமுறைகள் மாற்றம் என்பது சந்தையில் டிராக்டர் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் 2024ம் ஆண்டு சற்று கடினமானதாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடுத்தர காலகட்டத்தில் இந்த நிறுவனத்தின் CAGR விகிதமானது 4 – 6 சதவீதமாக இருக்கலாம் என்றும், இதே நீண்டகால நோக்கில் 7 – 9 சதவீதமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய நிலவரம் என்ன?

இன்றைய நிலவரம் என்ன?

NSE-யில் இப்பங்கின் விலையானது இன்று 0.39% குறைந்து, 1603.85 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 1624 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலையானது, 1575 ரூபாயாக உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 1934 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 1100 ரூபாயாகும்.

BSE-யில் இப்பங்கின் விலையானது தற்போது, 0.56% குறைந்து, 1600.65 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 1623 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலையானது,1575.05 ரூபாயாக உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 1930 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 1100.10 ரூபாயாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

150% rise in 2 years! Rakesh jhunjhunwala reduced his shares in this firm

150% rise in 2 years! Rakesh jhunjhunwala reduced his shares in this firm/150% rise in 2 years/லாபத்தினை அள்ளிய ராகேஷ் ஜுன்ஜுன்வாலா.. 2 வருடத்தில் 150% லாபம்.. நீங்க?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.