ஒரே சிக்ஸரில் உலக சாதனை படைத்த பாண்ட்யா! அந்த சிக்ஸரில் அப்படி என்னதான் ஸ்பெஷல்?!

மும்பை அணியில் ஆல் ரவுண்டராக இருந்துவந்த ஹர்திக் பாண்டியா, நடப்பு சீசனில் அணி மாறினார். குஜராத் அணிக்குத் தாவிய ஹர்திக் பாண்ட்யா அவ்வணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் களமிறங்கிய குஜராத் அணி முதல் 3 போட்டிகளிலும் வென்று, பலரையும் திரும்பிப்பார்க்க வைத்தது.

நான்காவது போட்டியில் ஐதராபாத்துடன் மோதிய குஜராத் அணி தோல்வியைச் சந்தித்தது. இப்போட்டியில் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக விளையாடி அரைசதமடித்தார். இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையொன்றை அவர் படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் சிக்சர் ஒன்றை அடித்தார் ஹர்திக் பாண்ட்யா. இந்தப் போட்டியில் அவர் அடித்தது ஒரு சிக்சர்தான் என்றாலும் ஒட்டுமொத்தமாக அவர் அடிக்கும் 100ஆவது சிக்சராக அது பதிவானது.

                                                                                

இதுதான் தற்போது புதிய சாதனையாக மாறியுள்ளது, அதாவது, இந்த சிக்சர் வாயிலாக, ஐபிஎல் தொடரில் அதிவிரைவாக 100 சிக்ஸர்கள் கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஹர்திக் பாண்ட்யா பெற்றுள்ளார்.  இந்த சாதனையை நிகழ்த்த அவருக்கு 1094 பந்துகள் மட்டுமே தேவைப்பட்டுள்ளது. மற்றொரு இந்திய வீரரான ரிஷப் பந்த் 1224 பந்துகளில் 100 சிக்ஸர் அடித்து 2ஆவது இடத்தில் உள்ளார்.

 

மேலும் படிக்க | CSKவுக்கு ஜடேஜாவைக் கேப்டனாக்குனதுதான் தப்பாம்!- சொன்னது யார் தெரியுமா!?

சர்வதேச அளவில் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் ஆந்த்ரே ரஸ்ஸல். அதிரடி வீரரான ரஸல், 100 சிக்ஸர் சாதனையை எட்டிப்பிடிக்க வெறும் 657 பந்துகளே தேவைப்பட்டுள்ளன. மற்றொரு அதிரடி வீரரான க்றிஸ் கெய்ல்  943 பந்துகளில் இந்த இலக்கை எட்டியுள்ளார். அந்த வகையில் இந்தப் பட்டியலில் ஹர்திக் பாண்ட்யா தற்போது 3ஆவது இடத்துக்குத் தாவியுள்ளார்.

                                                                             russel

மும்பைக்காக விளையாடிவந்த தொடக்க காலத்தில் கடும் அதிரடியாக விளையாடிவந்த ஹர்திக் பாண்ட்யா சமீப காலமாக மோசமான ஃபார்ம் அவுட்டில் இருந்தார். இடையில் காயம் உள்ளிட்ட காரணங்களாலும் அவர் சிக்கித் தவித்துவந்தார். இதனால் அவரது வழக்கமான பேட்டிங்கை சமீப காலமாக காணமுடியவில்லை. பழைய ஃபார்மில் அவர் தொடர்ந்து விளையாடியிருந்திருந்தால் இந்தச் சாதனையை அவர் இன்னும் குறைந்த பந்துகளிலேயே  படைத்திருப்பார் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | கேப்டன்சியில் தோனி தலையிடுவதாக ஜடேஜா புகார்: CSKவுக்குள் புது பூகம்பம்?!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.