பணி நீக்க ஊழியர்கள் மீண்டும் நியமனம்| Dinamalar

பெங்களூரு : பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்தியதால், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் நியமித்து, பி.எம்.டி.சி., உத்தரவிட்டுள்ளது.கர்நாடக போக்குவரத்துக்கழக ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும்படி வலியுறுத்தி, 2021 ஏப்ரல் 7 – 20 வரை போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தை துாண்டி விட்ட அதிகாரிகளின் பணியில் குறுக்கிட்ட குற்றச்சாட்டின் கீழ் பயிற்சி ஊழியர்கள் உட்பட 1,353 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.தொழிலாளர் நலத்துறை கமிஷனரிடம் அளிக்கப்பட்ட, அனைத்து புகார்களுக்கும் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது.பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை, கட்டம், கட்டமாக மீண்டும் பணியில் நியமிப்பதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு நம்பிக்கை அளித்திருந்தார்.இதன்படி ஊழியர்களை நியமித்து, பி.எம்.டி.சி., உத்தரவிட்டு வருகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.