திடீரென விலகிய ஃபரீனா ஆசாத்… பாரதி கண்ணம்மாவின் அடுத்த வெண்பா யார்?

Bharathi Kannamma Venba Farina Azad Quit That Serial : விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வரும் இந்த சீரியலில், பாரதியாக அருண்பிரசாத், கண்ணம்மாவாக வினுஷா தேவி, வெண்பாவாக ஃபரீனா ஆசாத் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் சந்தேகத்தை அடிப்படியாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல், விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில, கடந்த சில எபிசோடுகள் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் விதமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும் இந்த சீரியலக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில், வினுஷா தேவிக்கு முன்பாக இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷ்னி ஹரிப்பிரியன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென சீரியலில் இருந்து விலகினார். அவரை தொடர்ந்து சீரியல்ல அவரது தங்கை அஞ்சலி கேரக்டரில் நடித்து வந்த நடிகை கண்மணி மனோகரன் விலகினார். இவர்களுக்கு முன்பாகவே பாரதியின் தம்பி அகிலாக நடித்து வந்த அகிலன் இந்த விலகலுக்கு அச்சாரம் அமைத்து வைத்தார்.

அந்த வரிசையில் தற்போது பாரதி கண்ணம்மா சீியலில் முக்கிய கேரக்டரான வில்லி வெண்பா கேரக்டரில் நடித்து வந்த ஃபரீனா ஆசாத் தற்போது சீரியலில் இருந்து விலகியுள்ளார். இவர் விலகலுக்காக காரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், தற்போது வெண்பா கேரக்டரில் நடிக்க ராஜபார்வை சீரியலில் நடித்துவந்த நடிகை கீர்த்தி கமிட் ஆகியுள்ளார்.

தான் கர்ப்பமாக இருந்த காலகட்டத்தில் டெலிவரிக்கு முன்பு வரை பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த ஃப்ரீனா ஆசாத் டெலிவரிக்கு சென்றபோது அவரது கேரக்டர் ஜெயிலுக்கு சென்றுவிட்டது போல் காண்பிக்கப்பட்டது. அதன்பிறகு அவர் டெலிவரி முடிந்து வரும்போது ஜெயிலில் இருந்து விடுதலையாகி வருவது போல் காட்சிகள் வைக்கப்பட்டது.

இப்படி பாரதி கண்ணம்மா சீரியலின் முக்கிய ஐகானாக திகழ்ந்து வந்த ஃப்ரீனா ஆசாத் தற்போது இந்த சீரியலில் இருந்து விலக காரணம் என்ன என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இது குறித்து ஃப்ரீனா ஆசாத்தில் விரைவில் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஃபரீனா தற்போது ஜீ தமிழின் அபி டெய்லர் சீரியலில் நடித்து வருவது குறிப்படத்தக்கது.

 “


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.