தீப்பெட்டி மூலப்பொருட்களின் விலை உயர்வு: தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்

தீப்பெட்டி தொழிலுக்கு தேவையான மூலப் பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
தீர்மானத்தில் பேசிய எம்.எல்.ஏ. கடம்பூர் ராஜு, தென் மாவட்டங்களில் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக முக்கிய தொழிலாக தீப்பெட்டி தொழில் உள்ளதாகவும், தற்போது மூலப்பொருட்களின் விலை 40 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதால் 6 லட்சம் தொழிலாளர்கள், ஏழை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
image
இதற்கு பதிலளித்து பேசிய சிறு, குறு & நடுத்த தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், “தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகளில், 4 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசியில் மட்டும் 500 நிறுவனங்கள் உள்ளன. தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தம் தொடர்பாக எனது துறை அதிகாரிகளுடன் நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடத்தியிருந்தேன்.
image
ஆலோசனையின் முடிவில் அமெரிக்க பொருளாதார கட்டுப்பாடுகள் காரணமாக பொட்டாஷியம் குளோரைடு ( KoCL ) விலை 50% வரை அதிகரித்துள்ளது தெரியவந்தது. அதேபோல் மெழுகு விலை, காகித அட்டை விலையும் உயர்ந்துள்ளது. இப்பிரச்சனையை கருத்தில் கொண்டு, சிட்கோ நிறுவனத்தின் மூலம் மெழுகை மொத்தமாக கொள்முதல் செய்து தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் காகித அட்டை தட்டுப்பாடும் ஏப்ரல் 1-ம் தேதிக்கு பின் படிப்படியாக குறையும்” என்று தெரிவித்தார்.
சமீபத்திய செய்தி: ஐரோப்பாவின் ஒருநாள் கொள்முதல்தான் எங்கள் ஒருமாத கொள்முதல்- அமெரிக்காவுக்கு இந்தியா பதில்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.