மாணவர்களுக்காக HP அறிமுகப்படுத்திய குரோம்புக் லேப்டாப்ஸ்!

ஹெச்பி இன்று புதிய Chromebook நோட்புக்கை அறிமுகப்படுத்தியது.
HP Chromebook
x360 14A லேப்டாப்பானது Intel Celeron புராசஸருடன் வருகிறது. Chromebook தொகுப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய பதிப்பு 4 முதல் 15 வயது வரையிலான பள்ளிக் குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த லேப்டாப்பின் விலை ரூ.23,888 முதல் தொடங்குகிறது. பள்ளிக் குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து டாஸ்குகளையும் இதில் செய்ய முடியும். அதுமட்டும் இல்லாமல், ஆன்லைன் கிளாஸுகளுக்கும் இந்த லேப்டாப் பயனுள்ளதாக இருக்கும்.

ஹெச்பி குரோம்புக் லேப்டாப் சிறப்பம்சங்கள்

HP Chromebook x360 14a மடிக்கணினி ஆனது 14 மணிநேரம் வரை பேட்டரி பேக்கப் தருகிறது. இன்றைய மொபைல் முதல் தலைமுறைக்கு இது சிறந்த தேர்வாக அமைகிறது. கூடுதலாக, இது 81% விழுக்காடு திரை, 14 இன்ச் HD டச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த லேப்டாப்பை டேப்லெட் அல்லது மடிக்கணினியாகவும் பயன்படுத்தலாம்.

மேலும், வீடியோ அழைப்புகளுக்கு, HD கேமரா மற்றும் Wi-Fi 5 ஆதரவு கொடுக்கப்பட்டுள்ளது.
HP
Chromebook x360 14a ஆனது 4GB ரேம், 64GB eMMC ஸ்டோரேஜ் மெமரியைக் கொண்டுள்ளது. இது மினரல் சில்வர், செராமிக் ஒயிட், ஃபாரஸ்ட் டெயில் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. இதன் எடை சுமார் 1.49 கிலோவாக உள்ளது.

நாசிக்கில் தயாராகும் இ-பாஸ்போர்ட் – விரைவில் விநியோகம் தொடங்கும்!

HP Chromebook x360 14a விலை:

HP Chromebook x360 14a இன்டெல் செலரான் N4120 விலை ரூ.29,999 ஆக உள்ளது. HP Chromebook 11″ இன்ச் மீடியாடெக் புராசஸர் கொண்ட லேப்டாப் விலை ரூ.23,999 முதல் தொடங்குகிறது. HP Chromebook 14A இன்டெல் புராசஸர் கொண்ட லேப்டாப்புக்கு நீங்கள் ரூ.27,999 செலுத்த வேண்டும். மேலும், HP Chromebook 14C X360 Pen Intel i3 11 Gen புராசஸர் கொண்ட லேப்டாப் விலை 56,999 ஆக உள்ளது. அதே நேரத்தில், இன்டெல் i5 Generation லேப்டாப் விலை ரூ.65,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய லேப்டாப் வெளியீடு குறித்து ஹெச்பி இந்தியா சந்தையின் மூத்த இயக்குநர் விக்ரம் பேடி கூறுகையில், “இன்றைய கலப்பின கற்றல் சூழலில் கணினிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதற்காகவே, புதிய HP Chromebook x360 14A ஐ அறிமுகப்படுத்துகிறோம்.

ஸ்லிம் & ஸ்லீக்கான புதிய ரியல்மி லேப்டாப் – இதுல எல்லாமே டாப் ஸ்பெக்ஸ் தான்!

மேம்பட்ட செயல்திறனில் கவனம் செலுத்தும் டிஜிட்டல் மாணவர்களுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அவர்களின் அன்றாட தேவைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால் அவற்றை பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.